Fact Check: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கைகோர்த்து நிற்கும் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய்; நடந்தது என்ன?
அம்பானி வீட்டுத் திருமணத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்ததாக ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
Salman khan with Aishwarya rai in Ambani wedding
முன்னாள் காதலர்களான பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டார்களா? உண்மையில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
Salman Khan and Aishwarya Rai Bachchan
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். ஆனால், விழா நடைபெற்ற இடத்தில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர்.
Salman Khan, Aishwarya Rai Reunite
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது. திருமணத்திற்கு, சல்மானும் ஐஸ்வர்யாவும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். இந்நிலையில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் அம்பானி திருமணத்தில் வைத்து ஒன்றாக போஸ் கொடுத்ததாக ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
Salman Khan and Aishwarya Rai relationship
ஆனால், சல்மான், ஐஸ்வர்யா மற்றும் அர்பிதா கான் ஆகியோர் ஒன்றாக போஸ் கொடுக்கும் இந்த புகைப்படம் போலியானது. உண்மையில், முதலில் சல்மான் கான் அர்பிதா கானுடன் ஒன்றாக போஸ் கொடுத்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் தனியாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார்.
Salman Khan joins Aishwarya Rai in Ambani Family Wedding
சமூக ஊடக பயனர்கள் ஐஸ்வர்யா ராய் தனியாக இருக்கும் படத்தை சல்மான் கான், அர்பிதா கான் இருக்கும் படத்துடன் சேர்த்து மார்பிங் செய்துவிட்டனர். மார்ஃபிங் செய்த இந்தப் படத்தைப் பகிர்ந்து அம்பானி வீட்டுத் திருமணத்தில் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் இணைந்துவிட்டதாக வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.