ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்.! போட்டா போட்டி போட்ட இளைஞர்கள்.. அறைகுரை ஆடைகளுடன் சிக்கிய இளம்பெண்கள்.!
சென்னையில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வரும் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேபோல், ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் விபச்சார தடுப்பு போலீசார் சென்னையில் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா சென்டரில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, அந்த இடத்தை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இதனையடுத்து, அந்த ஸ்பா சென்டரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சாரதா(39) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த செல்போனையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்களையும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு அவர்களை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்