உங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்..! நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..!
ஜப்பான் மற்றும் பல கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளவர்கள், இரத்த வகையை வைத்து ஒருவருடைய ஆளுமைகளை தெரிந்து கொள்ளமுடியும் என நம்புகிறார்கள். சரி வாங்க இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், போன்றவற்றின் மூலம் ஒருவருடைய பண்பு மற்றும் ஆளுமைகளை தெரிந்து கொள்ள முடியும் என பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் உங்களுடைய நட்சத்திரம் மூலம் உங்களை பற்றி துல்லியமாக கணிக்க முடியுமா என்பதை யோசித்துள்ளீர்களா?
சரி வாருங்கள் Blood குரூப் வைத்து கண்டிபிடிப்பது எந்த அளவிற்கு உங்களுக்கு பொருந்துகிறது என்பதை கமெண்ட் மூலம் சொல்லுங்கள்.
O குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்:
பொதுவாக இந்த இரத்த வகையை சேர்ந்தவர்கள், ஆளுமை பண்பை விரும்புவார்கள். மிகவும் போட்டி மனப்பான்மையைக் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். எந்த ஒரு தொழிலிலும் முன்னேர வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருக்கும். அதே நேரத்தில் தாராளமாகவும், கனிவானவர்களாகவும் இருப்பார்கள். O குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கணக்காளர்கள் போன்ற வேலைகளில் சிறப்பாக விளங்குவார்கள்.
A குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்:
இந்த வகை இரத்தத்தை உடையவர்கள் கண்ணியமானவர்களாகவும், கனிவானவர்களாகவும் இருப்பவர்கள். வெற்றிக்காக அதிகம் பாடுபடுவார்கள். பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சிறந்த நண்பர்களை உருவாக்கி கொள்வதிலும் அதிக ஆர்வம் இவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த இரத்த வகையை கொண்டவர்கள் அதிக அளவில் தங்களுடைய சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில், மற்றவர் தேவைகளை பூர்த்தி செய்வதிற்கும் ஆர்வம் உள்ளவர்கள். பெரும்பாலும் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கணக்காளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நூலகர்களாக இவர்கள் பிரகாசிப்பார்கள்.
B குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்:
இந்த வகை இரத்ததை கொண்டவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பவர். தங்களுடைய விஷயங்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உடல் மொழியை மிகவும் ஆர்வமாக கவனித்து உள்ளுணர்வை படிக்கும் திறன் கொண்டவர்கள். பெரும்பாலும் இவர்கள் மனநல மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் துப்பறியும் நபர்களாக பிரகாசிப்பார்கள்.
AB குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்கள்:
இந்த வகை இரத்தம் மிகவும் அரிதானது. இவர்கள் ஆன்மீகத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் இவர்களுக்கு உண்டு. அதே போல் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பதில் சிறந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும், நிர்வாகம், கல்வி , மக்கள் தொடர்புகளில் சிறந்து விளங்கலாம் மற்றும் அனைத்து இரத்த வகைகளுடனும் இனிமையாக பழகுவார்கள்.