வாவ்... வேற லெவல்... சமூக வலைத்தளத்தை கலக்கும் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே பிறந்த நாள் போட்டோஸ்!!
நடிகை பூஜா ஹெக்டே (pooja hegde) அக்டோபர் 13 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை (Birthday photos) குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை, அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கின் பக்கம் இவரது கவனம் திரும்பியது. அங்கு அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அடுத்தடுத்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
சில பாலிவுட் படங்களிலும் நடித்த பூஜாவை, மீண்டும் தமிழில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவழியாக பீஸ்ட் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் பூஜா தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் நடித்து வருவதால், இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பூஜா தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.
மஞ்சள் நிற தீம்முடன், அவரது நண்பர்கள் பூஜாவின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தன்னுடைய அசத்தலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடவும் தவறுவது இல்லை.
இவர் வெளியிடும் அழகு புகைப்படங்களை ரசிகர்களும் கண் கொட்டாமல் ரசித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்...