சமந்தா - நாகசைதன்யா உறவில் விழுந்த விரிசல்? மாமனார் நாகர்ஜுனா சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாரா?
நடிகை சமந்தா - மற்றும் அவருடைய கணவருக்கு இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை சரி செய்யும் முயற்சியில் நாகர்ஜுனா இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 5 வருடமாக ஒற்றுமையான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து பெற உள்ளதாக யூகிக்க படுகிறது. இதுகுறித்த தகவலும் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.
அது மட்டுமல்ல, சமந்தாவும் நாகாவும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக திருமண ஆலோசகர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவாகரத்து வதந்தி, சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து குடும்ப பெயரை நீங்கியதால் துவங்கியது. மேலும் இம்முறை தன்னுடைய மாமனாரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ளாமல், சமூக வலைத்தளத்தில் மட்டுமே வாழ்த்து தெரிவித்தது, இந்த விவாகரத்து குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.
மேலும் சில தெலுங்கு மீடியாக்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் குடும்ப நல நீதி மன்றத்தை நாடியுள்ளதாக கூறுகிறது. ஆனால் இது குறித்து இரு தரப்பினரிடமும் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இவர்களுடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலர் பிரச்சனைகள் குறித்து வாய் திறக்கவில்லை என்றாலும், இவர்களுடைய பிரச்னையை தீர்க்க நாகர்ஜுனா முயற்சித்து வருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் நடிகை சமந்தா இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேச மாறுகிறார். எனவே இவர்களுடைய விவாகரத்து விவகாரம் எதுவரை செல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.