மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா!
நடிகை நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக பிரியங்கா தற்போது மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் 'ரோஜா'. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
வடிவுக்கரசி, நதியா,ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரேட்டிங்கிலும் கெத்து காட்டி வருகிறது.
எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.
ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
சிவப்பு நிற சேலையில், நிறைய நகைகள் அணிந்து, கையில் சூலம் வைத்து கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.