காதல் ததும்ப ததும்ப காதலர் விக்னேஷ் சிவனை கட்டி பிடித்து... பிறந்தநாள் சர்பிரைஸ் கொடுத்த நயன்தாரா! போட்டோஸ்
நடிகை நயன்தாரா தன்னுடைய காதலர் பிறந்தநாளுக்கு, பிரமாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் சர்பிரைஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, விக்கி நன்றி தெரிவித்துள்ள புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
nayanthara
படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள்.
சமீபத்தில் தன்னுடைய அம்மா பிறந்தநாளை கொச்சியில் மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்த நயன்தாரா, தற்போது தன்னுடைய காதலர் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
எத்தனை படங்களில் நயன் நடித்தாலும், தன்னுடைய அனைத்து வேலைகளையும் ஓரம் கட்டி விட்டு, காதலர் மற்றும் குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றால் அந்த இடத்தில் ஆஜர் ஆகி விடுவதையும் நயன்தாரா வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் விக்கிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ள நயன், காதலருடன் மிகவும் சந்தோஷமாகவும், அவரை இறுக்கி அணைத்தபடி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இருவருமே கருப்பு நிற உடையில்... மிகவும் கலர் ஃபுல்லான மலர்களால் டிசைன் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்ட கேக்குகள் முன்பு நின்று கொண்டிருக்கிறார்கள். மேலும் இதற்க்கு நன்றி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், நயனை தான் ஈடு இடையில்லாத பரிசு என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.