'நாய் சேகர்' டைட்டிலுக்கு முட்டி மோதி பார்த்தும் கிடைக்கல!! வடிவேலு படக்குழு எடுத்த எதிர்பாராத முடிவு!!
ஏற்கனவே 'நாய் சேகர்' என்கிற படத்தின் தலைப்பு, நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு வைக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வடிவேலு படக்குழுவினர் அந்த தலைப்பு தங்களுக்கு கிடைக்காததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய உச்சாகத்தோடு வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகியுள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கூட, வடிவேலு 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, உயிர் உள்ளவரை மக்களை மகிழ்விப்பதற்காக நடித்து கொண்டே இருப்பேன். சிறு குழந்தைகள் கூட தன்னை போல் முகத்தை பாவனை செய்யும் போது, இது தனக்கு கிடைத்த வரமாகவே பார்ப்பதாக உணர்வு பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க, வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்தனர்.
எனவே இந்த படத்தின் தலைப்பை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சதீஷை நாயகனாக வைத்து இயக்கம் காமெடி படத்திற்கு பொருத்தமாக இருப்பதால் சூட்டியுள்ளனர். பெரிய நிறுவனம் இந்த தலைப்பிற்கான உரிய அனுமதியை வைத்துள்ளதால் வடிவேலு முதல் அனைவருமே முட்டி மோதி பார்த்தும் இவர்களுக்கு இந்த படத்தின் தலைப்பு கிடைக்கவில்லை.
எனவே வடிவேலு பட குழுவினர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். 'நாய் சேகர்' என்கிற தலைப்புக்கு பதிலாக 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்கிற தலைப்பை வைக்க யோசித்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.