Pooja Hegde: மீன்களோடு மீனாக கவர்ச்சி கன்னியாக மாறிய பூஜா ஹெக்டே! கடலையே கொந்தளிக்க வைத்த செம்ம ஹாட் போட்டோஸ்!
சமீபத்தில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே (Pooja hegde) தன்னுடைய விடுமுறையை கழிப்பதற்காக மாலத்தீவு சென்று வந்த நிலையில், தற்போது பிகினி உடையில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் (Scuba diving) செய்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Pooja Hegde
தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு பிடித்து தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.
ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா பின்னர், தளபதி விஜய்யின் படம் என்பதாலும், 'பீஸ்ட்' படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார்.
தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு அடுத்த அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் செம்ம பட மழை என்று தான் கூறவேண்டும்.
தொடர்ந்து ஓயாமல் ஷூட்டிங்கில் பிசியாக இயங்கி கொண்டிருந்த பூஜா ஹெக்டே, சுமார் ஒருவார காலம் ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுக்கு விசிட் அடித்தார்.
அங்கு சென்றதும் அம்மணி திரையில் கூட காட்டாத அளவுக்கு பிகினி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தற்போது உடலோடு ஒட்டி இருக்கும் வெள்ளை நிற பிகினி உடையில் ஸ்கூபா டைவிங் செய்த சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கடலையே கொந்தளிக்க வைக்கும் கவர்ச்சியில்... மீன்களோடு மீனாக நீந்தி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சில வற்றை பூஜா ஹெக்டே வெளியிட ரசிகர்கள் வழக்கம் போல் இவரது அழகை வர்ணித்து தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.