ஸ்கூல் ட்ராப் அவுட் முதல் - டாக்டரேட் வரை..! பலருக்கும் தெரியாத நடிகை விசித்ராவின் மறுபக்கம்..!
10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விசித்ரா, குணச்சித்திர கதாப்பாத்திரம், கவர்ச்சி, காமெடி என பல வேடங்களில் நடித்துள்ளார்.
vichitra
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. பொற்கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விசித்ரா, சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விசித்ரா, குணச்சித்திர கதாப்பாத்திரம், கவர்ச்சி, காமெடி என பல வேடங்களில் நடித்துள்ளார்.
vichitra
தலைவாசல் படத்தில் அம்சா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார். ரசிகன், முத்து, சுயம்வரம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கவர்ச்சி இல்லாமல் கவுண்டமணியோடு சேர்ந்து விசித்ரா நடித்த காமெடி படங்களை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பொண்ணு வீட்டுக்காரன் படத்தில் டயானா என்ற ஆங்கிலோ இந்தியன் கேரக்டர், வில்லாதி வில்லன் படத்தில் குணச்சித்திர நடிப்பு என 90களில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vichitra
திரைப்படங்கள் மட்டுமின்றி பல சீரியல்களிலும் விசித்ரா நடித்துள்ளார். கோகிலா எங்கே போகிறாள், ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார். சினிமா, சீரியல் மட்டுமின்றி, தனது சமையல் திறனை வைத்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், 3-ம் இடத்தை பிடித்தார்.
நடிகை விசித்ராவின் நடிப்பு மற்றும் சமையல் திறமை பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகை விசித்ராவின் கல்வித்தகுதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை விசித்ராவின் தந்தை நடிகர் வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா. விசித்ராவுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். விசித்ராவின் தந்தை 2011 ஆம் ஆண்டு அவர்களது பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த வேதனையிலிருந்து சிறிது சிறிதாக விசித்ரா மீண்டு வந்தார்.
தனது கணவர் ஹாஜியை கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் தான் விசித்ரா சந்தித்தார். ஹாஜி ஹோட்டலின் பொது மேலாளராக இருந்தார். இருவரும் காதலித்து 2001ல் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், கடைசி மகன்கள் இரட்டையர்கள், கணவர் ஹாஜி ஓட்டல் துறையில் இருந்ததால், மும்பை, புனே, பெங்களூரு என பல இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் பெற்று வந்தார்.
vichitra
குடும்ப சூழல் காரணமாக 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் விசித்ரா. எனினும் நடித்து கொண்டிருக்கும் போதே 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற விசித்ரா, தொலைதூர கல்வி மூலம் பி.ஏ சைக்காலஜி முடித்தார். திருமணமான பிறகு, உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் முடித்தார். தற்போது உளவியல் துறையில் டாக்டரேட் பட்டம் வாங்கி உள்ளார் விசித்ரா. தன் மகன் படித்த பள்ளியில் உளவியல் ஆலோசனையும் அளித்து வந்த அவர். இந்தப் பணியை மனநிறைவோடு செய்கிறேன் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். மேலும் உளவியலில் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார்.
Jovika and Vichithra
தற்போது பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்று 18 போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவராக விசித்ரா கருதப்படுகிறார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ள விசித்ரா அடிப்படை கல்வியின் அவசியம் குறித்து ஜோவிகாவிடம் பேசியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.. கல்வி குறித்து ஜோவிகா - விசித்ரா இடையிலான மோதல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் வாழும் ஜோவிகா போன்ற ஸ்டார் எலைட் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி தேவையில்லை என்றாலும், சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.