வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய கவர்ச்சி நடிகை முமைத்கான்! ஓட்டுநர் பரபரப்பு தகவல்..!
தமிழில், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் சிறு சிறு கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை முமைத்கான், வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக இவர் மீது கார் ஓட்டுநர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழில் நடிகர் பிரஷாந்த் நடித்த 'ஜெய்' படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானவர் முமைத்கான்.
இதை தொடர்ந்து தலைநகரம், போக்கிரி, வில்லு, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில் இவர் மீது கார் ஓட்டுநர் ராஜு என்பவர் தனக்கு தர வேண்டிய கார் வாடகை ரூபாய் 15 ஆயிரத்தை கொடுக்காமல் முமைத்கான் ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.
முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய 15 ஆயிரத்தை தரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை போன்றவற்றை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை போல் கஷ்டப்படும் மற்ற ஓட்டுனர்கள் இது போல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே இதனை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த தகவல், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.