இதை தான் வெளியில் உள்ளவர்கள் செருப்பால் அடிப்பார்கள்..! அனல் பறக்கும் பிக்பாஸ் பட்டி மன்றம்..!
ஒருவழியாக நாடா... காடா டாஸ்க் நிறைவடைந்து தற்போது, புதிய டாஸ்க் ஒன்றை இன்று நடத்துகிறார் பிக்பாஸ். அந்த வகையில் தற்போது அனல் பறக்கும் பட்டி மன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சுரேஷ் படித்து காட்டுகிறார்.
இதை தொடர்ந்து முதல் ஆளாக வந்து பேசும் வேல்முருகன், இந்த குடும்பம் இருந்தால் தான் விளையாட்டு... விளையாட்டு இருந்தால் தான் ஜெயிப்பு என கூறுகிறார்.
இதை தொடர்ந்து வந்து பேசும் அனிதா, அன்பு அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என இப்போது பேசிய நீங்கள் ஏன்? அன்று எல்லோரும் சேர்ந்து உங்களை குத்தியபோது அழுதீர்கள் என கேட்கிறார்.
பின்னர் ரியோ அனைவரும் தங்களுடைய தேவைக்காக தான் இந்த போட்டி களத்திற்குள் வந்ததாக பேசுகிறார்.
இவரை தொடர்ந்து பேசும் நிஷா, பட்டி மன்ற பேச்சாளராகவே மாறிவிட்டார். அதே தொனியில், புரணி பேசுவது அழகு என்றும், ஒருவருடைய உள்ளத்தையும், உருவத்தையும் உடைக்கும் போது தான் அந்த புரணி அசிங்கம். அந்த புரணியை தான் வெளியில் உள்ளவர்கள் செழுப்பாலா அடிப்பாங்க என கூறி தன்னுடைய பேச்சால் சும்மா மிரட்டியுள்ளார்.