ஒரே அருவெறுப்பு, ஆபாசம்... கல்லூரி மாணவனால் பிரபல நடிகை சந்தித்து வந்த பாலியல் டார்ச்சர்...!
தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணும், இன்ஸ்டாகிராமிற்கும் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகள் அடங்கிட மெசெஜ் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் முன்னாள் காதலியும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சனம் ஷெட்டி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பர மாடலான சனம் ஷெட்டி, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது என ஆக்டிவாக வலம் வருகிறார்.
அப்படியிருக்க தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணும், இன்ஸ்டாகிராமிற்கும் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகள் அடங்கிட மெசெஜ் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து சனம் ஷெட்டிக்கு தொடர்ந்து ஆபாச மெசெஜ்களை அனுப்பி வந்த இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் செல்போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அது திருச்சியைச் சேர்ந்த ராய் ஜான்பால் என்ற கல்லூரி மாணவனுடையது என்பது கண்டறியப்பட்டது.
பிரபல நடிகைக்கு இப்படி தொடர்ந்து மெசெஜ் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ராய் ஜான்பாலை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தத் தொடங்கினால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.