குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு... பச்சை நிற மோனோகினி உடையில் கவர்ச்சி அதகளம் பண்ணும் அனுஷ்கா ஷர்மா!
பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் சில புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்,அதில் ஒரு பச்சை நிற பிகினி உடை அணிந்து, நீச்சல் குளத்தில் நின்று கொண்டு சிரிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நேற்று, நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியான் பச்சை நிற மோனோகினி அணிந்து, நீச்சல் குளத்தை சூடேற்றும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
குழந்தை பெற்ற பின்பு இது போன்று மிகவும் போல்டான புகைப்படங்களை, வெளியிட்ட அனுஷ்கா ஷர்மாவின் சில புகைப்படங்கள் ரசிக்கப்பட்டு வந்தாலும், சிலர் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
அனுஷ்கா ஷர்மாவின் கணவர் விராட் கோலி... மனைவியின் இந்த கவர்ச்சி உடை பதிவிற்கு, ஹார்ட் மற்றும் அன்பான எமோஜிகளுடன் மூலம் தன்னுடைய கருத்தை அழகாக தெரிவித்திருந்தார்.
குறிப்பாக அனுஷ்கா, இந்த புகைப்படத்தில் பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன், பூரித்த புன்னகையோடு துளியும் மேக்கப் இன்றி காணப்பட்டார் இவரது புகைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை வசீகரித்ததோ அதே அளவிற்கு அவரது ஆடையும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
அனுஷ்காவின் இந்த மோனோகினி நீச்சல் உடை, நியூயார்க்கில் ரிசார்ட் உடைகள் பிராண்டான சாலிட் & ஸ்ட்ரைப்டிலிருந்து வந்தது, இதன் விலை சுமார் 119 அமெரிக்க டாலர்கள் (ரூ. 8, 860) ஆகும்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவாஹே வழக்கமாக வைத்திருந்தாலும் குழந்தை பிறந்த பின், தற்போது பிகினி உடை கவர்ச்சியில் அதகளம் புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.