ப்ளூ மூன் போல்... நீல நிற சேலையில் பளபளக்கும் தமன்னா!! இளம் நெஞ்சங்களை தவிக்கவிட்ட ஹாட் போடோஸ்!!
தமன்னா நீல நிற மார்டன் உடையில் பளபளவென நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார்.
தற்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தமன்னா கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நீல நிற ஷைனிங் சேலையில், தமன்னா... மூன் மூன் போல் செம்ம கோடாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.