பிக்பாஸ் வீட்டை தாக்கப்போகும் கவர்ச்சி புயல்கள்... தற்போது எங்க மையம் கொண்டிருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2 கவர்ச்சி புயல்கள் அதில் பங்கேற்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பை காண ஆவலுடன்
காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 4ம் தேதி போட்டியாளர்கள்
அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 3 சீசன்களை விடவும் இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை, 12 போட்டியாளர்களுடன்
80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த போட்டியாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நிகழ்ச்சி தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த இரண்டு போட்டியாளுக்கு பதிலாக புதிதாக இருவரை களம் இறக்க விஜய் டி.வி.நிர்வாகம் தீவிரமாக முயன்று வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் குயின்களான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணனை பிக்பாஸ் வீட்டிற்குள் பார்க்க தான்.
பிக்பாஸ் ஆரம்பிக்க போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே பலருடைய பெயர்கள் இவர்கள் தான் போட்டியாளர்கள் என சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த லிஸ்டில் ஆரம்பம் முதலே ரம்யா பாண்டியன், ஷிவானி பெயர் மட்டும் மாறாமல் நிலைத்து இருந்தது.
பிக் பாஸ் 4 வீட்டிற்கு நாங்கள் செல்லவில்லை என்று அவர்கள் இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் கண்டிப்பாக இரண்டு கவர்ச்சி புயலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தே தீரும் என ரசிகர்கள் மரண வெயிட்டிங்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதியாகிவிட்டது. இருவரும் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்துக் கொண்டுள்ளார்களாம்.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனைகளோடு சேர்த்து கவர்ச்சி குதூகலத்திற்கும் பஞ்சமிருக்காது.