"என்னை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் இவர் தான்..” ஓப்பனாக பெயரை சொன்ன நடிகை ஷகிலா..
பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
தமிழ் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பேசிய நடிகை விசித்ரா, தன்னை டாப் ஹீரோ ஒருவர் படுக்கைக்கு அழைத்தது குறித்தும், அதன்பிறகு தனக்கு நடந்த சில பிரச்சனைகள் குறித்தும் பேசியிருந்தார். மேலும் தான் திரையுலகை விட்டு விலகியதற்கு இந்த சம்பவம் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் விசித்ரா சொன்ன சம்பவம் படம் குறித்தும், அந்த உச்ச நடிகர் யார் என்பது குறித்தும் நெட்டிசன்கள் ஆதாரங்களை அடுக்க தொடங்கினர்.
இந்த நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விசித்ரா எனது தோழி தான். இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ளோம். தனது அனுபவத்தை அவர் மனம் திறந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதை யார் செய்தார் என்பதையும், அந்த ஹீரோவின் பெயரையும் விசித்ரா குறிப்பிட்டிருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஷகிலா “ நான் இன்னும் தெலுங்கு திரையுலகில் வேலை பார்க்கிறேன். நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல போராட்டங்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில், அல்லரி நரேஷின் தந்தையும், எழுத்தாளரும் இயக்குநருமான ஈ.வி.வி.சத்யநாராயணா என்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி, என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார். ஆனால் தற்போது உங்கள் படத்தில் நடித்ததற்காக எனக்கு சம்பளம் வந்துவிட்டது.
மீண்டும் உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று பதிலளித்தேன். அவர் இப்போது உயிருடன் இல்லை, ஆனால் டோலிவுட் மீடியாக்களிடம் இது பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை தனது அறைக்கு அழைத்தார். இதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.
1982 இல் தெலுங்கு திரையுலகில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஈவிவி சத்யநாராயனா, செவிலோ புவ்வு (!990) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தாலும், நகைச்சுவை படங்களை இயக்கி வெற்றி கண்டார். இதை தொடர்ந்து நகைச்சுவை மற்றும் குடும்பக்கதை கொண்ட பல வெற்றிகரமான படங்களை உருவாக்கிய மிகவும் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஈவிவி சத்யநாராயனா,2011-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி காலமானார். அவரின் மகன்கள் அல்லர் நரேஷ், ஆர்யன் ராஜேஷ் ஆகியோ தெலுங்கு திரையுலகில் நடித்து வருகின்றனர். நரேஷ் தெலுங்கு திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
shakeela
இதனிடையே நடிகை ஷகிலா சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் தெலுங்கு 7 இல் கலந்து கொண்டார். எனினும் இரண்டாவது வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.