மஞ்சள் நிற சேலையில் விருதுடன் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு குளுகுளு கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே..!
பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே தான் வாங்கிய விருதுடன், படுக்கையறையில் படுத்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் படுத்தபடி, கையில் விருதுடன் போட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
அந்த பதிவில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார்.
அதாவது நடிகை பூஜா கடந்த கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த தெலுங்கு திரைப்படம் ’வைகுந்தபுரமுளு’ இந்த படத்திற்கு மட்டும் மொத்தம் 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளதை தான் இவ்வளவு மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார் பூஜா.
இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும், த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் சிறந்த இயக்குனராகவும், சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருதை தமன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த விருது விழாவில், மஞ்சள் நிற சேலையில் சும்மா தக தகவென மின்னும் தேவதை போல் கலந்து கொண்ட பூஜா, மிகவும் மகிழ்ச்சியோடு இந்த படத்திற்காக போட்ட உழைப்பு வீண் போகாமல் விருதுகளை கிடைக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.