தாறுமாறா கிழிந்த துணியை முடிச்சு போட்டு கட்டியது போல் கவர்ச்சி உடை..! ஓவர் ரணகளம் செய்யும் கேத்தரின் தெரசா..!
விதவிதமான உடையில் புகைப்படம் வெளியிட்டு கவர்ச்சி ரணகளம் செய்து வரும் நிலையில், தற்போது... இவர் வெளியிட்டு வித்தியாசமான உடை இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித், 'அட்டகத்தி' படத்தை தொடர்ந்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான 'மெட்ராஸ்'படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா.
இந்த படத்தை தொடர்ந்து 'கதகளி', 'கடம்பன்', 'கலகலப்பு 2 ', 'கதாநாயகன்' என இவருக்கு திரைப்படங்கள் வரிசை கட்டியது.
ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும், பின்னர் அளவுக்கு மீறிய கவர்ச்சியை அள்ளிதெறித்து படங்களில் நடிக்க துவங்கினார்.
இவர் காட்டி வரும் ஹாட் கவர்ச்சிக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறதோ இல்லையே... தெலுங்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது.
அந்த வகையில் தமிழில், இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'அருவம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் தமிழ் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.
தெலுங்கில் கை வசம் மூன்று படங்கள் உள்ள நிலையில், பட வாய்ப்பை பிடிக்க விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்படியெல்லாம் ஒரு உடையா? என யோசிக்கும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.