- Home
- Cinema
- Anupama parameswaran : அப்போ லிப் கிஸ்... இப்போ கர்ப்பமா? - தீயாய் பரவும் அனுபமாவின் போட்டோ! ஷாக் ஆன ரசிகர்கள்
Anupama parameswaran : அப்போ லிப் கிஸ்... இப்போ கர்ப்பமா? - தீயாய் பரவும் அனுபமாவின் போட்டோ! ஷாக் ஆன ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா, சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், இதன்பின் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காத்தால் தெலுங்கு பக்கம் சென்றார் அனுபமா.
தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா. அண்மையில் அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படம் வெளியானது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
சினிமாவில் அறிமுகமானபோது நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என கூறி இருந்த அனுபமா, இந்த படத்திற்காக லிப்லாக் காட்சியில் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். மேலும் இந்த லிப் லாக் காட்சியில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா, சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் அவரது ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளது. புகைப்படங்களில் நடிகை அனுபமா, நிறைமாத கர்ப்பிணி போல் இருப்பது இந்த அதிர்ச்சிக்கு காரணம். இது மலையாள படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம் தான் என்று அவர் குறிப்பிட்டதை பார்த்த பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இருப்பினும் ஒரு சிலர் அவர் உண்மையிலேயே கர்ப்பமாக இருப்பதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த புகைப்படங்களை பார்த்து நடிகை வித்யூலேகா போட்டுள்ள கமெண்டில், சீரியஸாவே நான் வாழ்த்து தெரிவிச்சு டைப் பண்ண போயிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.