15 ஆம் ஆண்டு திருமணநாள்... சூர்யாவுக்கு ஜோதிகா கொடுத்த வேற லெவல் பரிசு..! வெளிவந்த அபார திறமை!!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா - ஜோதிகா இருவரும், இன்று தன்னுடைய 15 ஆவது வருட திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். காலையிலேயே தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோதிகா, பின்னர் சூர்யாவுக்காக சூப்பர் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. 90 களில், முன்னணி நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனிப்பதற்காக சில ஆண்டுகள் திரைத்துறையிலிருந்து விலகியே இருந்தார்.
குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ஜோதிகா, கடந்த 2015 ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் தயாரிப்பில், ' 36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
முதல் படமே ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் தொடர்ந்து வெளியான மகளிர் மட்டும், நாச்சியார், 'காற்றின் மொழி' , 'ராட்சசி' போன்ற திரைப்படங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது தன்னுடைய கணவரின் தயாரிப்பில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'உடன்பிறப்பே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இன்றைய தினம் தன்னுடைய 15 ஆவது திருமண ஆண்டை கொண்டாடும் நடிகை ஜோதிகா, கணவர் சூர்யாவிற்கு கொடுத்துள்ள அன்பு பரிசின் மூலம் அவரது அபார திறமை வெளிப்பட்டுள்ளது.
தன் கைகளால் வரைந்த, சூர்யாவின் ஸ்டைலிஷ் புகைப்படம் மற்றும் ஒரு ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை கட்டி பிடித்து கொண்டு இருப்பது போன்றும் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் எமோஷனலாக சில வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, சரியான நபரை சந்திப்பது என்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக மாற வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் அதே நபருடன் ஒவ்வொரு நாளும், மீண்டும் மீண்டும் காதலில் விழுவது என்பது என்னையும் மீறி நடந்த செயல். அவர் அவராகவே இருப்பதால்தான் அது சாத்தியமானது. என் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு நல்ல கணவராக, அப்பாவுக்கு, சில நேரங்களில் எனது அம்மாவாகவும் இருப்பவருக்கு, மிக முக்கியமாக என் வாழ்நாள் நண்பனுக்கு, எனது சிங்கத்துக்கு இந்த நாளில் ஒரு குட்டிப் பரிசு' என பதிவிட்டுள்ளார்.