ஐஸ்வர்யாவை டாஸ்கில் தோற்கடித்திட விஜயலஷ்மி போட்டிருக்கும் பலே ப்ளான்
தாக்குப்பிடிப்பாரா சர்வாதிகாரி? பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி கொண்டிருப்பதால் மிக கடுமையான டாஸ்குகளை தர ஆரம்பித்திருக்கிறார் பிக் பாஸ்.
தாக்குப்பிடிப்பாரா சர்வாதிகாரி? பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி கொண்டிருப்பதால் மிக கடுமையான டாஸ்குகளை தர ஆரம்பித்திருக்கிறார் பிக் பாஸ்.
இந்த டாஸ்குகளால் தற்போது திணறிப்போயிருக்கின்றனர் பிக் பாஸ் போட்டியாளர்கள். பிக் பாஸ் தரக்கூடிய இந்த டாஸ்க்குகளை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் போட்டியாளர்கள் எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் இப்போதிருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் மீதான கோபம் தான் அதிகரித்து கொண்டே செல்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியின் போது கூட யாஷிகாவின் புடவையை டாஸ்க் என்ற பெயரில் தாறுமாறாக கிழித்தார் விஜயலஷ்மி. இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி இருந்தது. இந்நிலையில் இன்றைய பிரமோவின் போது ஐஸ்வர்யாவை அவரின் டாஸ்கை செய்ய விடாமல் தடுக்க தொடர்ந்து திட்டம் தீட்டி வருகிறார் விஜயலஷ்மி.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்துக்குள் நுழைவதற்கான கோல்டன் டிக்கெட்டை வென்றிருக்கும் ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டி இருக்கிறார் விஜயலஷ்மி, ஐஸ்வர்யாவின் கைகளை அவர் வைத்திருக்கும் இடத்தில் இருந்து எடுக்க வைக்க வேண்டும் . இதற்காக அவரது கையில் ஒரு பக்கம் எடை அதிகம் உள்ள பொருளை கட்டி தொங்க விட்டதுடன் இன்னொரு பக்கம் அவரின் முகத்தில் தண்ணீரை வீசி அடிக்கிறார்.
விஜயலஷ்மியின் இந்த ஐடியா சூப்பர் தான், ஆனாலும் நிகழ்ச்சியின் பாதியில் வந்த இவர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யும் எந்த விஷயமுமே அவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. மொத்தத்தில் விஜயலஷ்மியின் இந்த ஐடியாவால் ஐஸ்வர்யா டாஸ்கில் தோற்றாரா? என்பது இன்றைய நிகழ்ச்சியின் போது தான் தெரியவரும்.