ஐஸ்வர்யாவுக்கு தான் மக்கள் ஆதரவு அதிகமாம்; சென்றாயன் ஏன் இப்படி சொல்றார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எலிமினேட் ஆனவர் தான் சென்றாயன். இந்த சீசனின் துவக்கத்தில் சென்றாயனுக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடையாது. 

First Published Sep 27, 2018, 1:48 PM IST | Last Updated Sep 27, 2018, 1:48 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எலிமினேட் ஆனவர் தான் சென்றாயன். இந்த சீசனின் துவக்கத்தில் சென்றாயனுக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடையாது. 

ஆனால் அவரின் யதார்த்தமான கிராமத்து பேச்சு நாட்கள் செல்ல செல்ல அவருக்கு அதிக அளவிலான பிக் பாஸ் ரசிகர்களை பெற்று தந்தது. ஒரு கட்டத்தில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்  என யாருமே எதிர்பார்க்காத போது அங்கிருந்து வெளியேறினார் சென்றாயன்.

இப்போதும் கூட பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே சென்றாயனுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நிலையை எட்டி இருப்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது போட்டியாளர்களாக விஜயலஷ்மி, ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா ஆகிய நான்கு பெண்கள் தான் இருக்கின்றனர். இந்த முறை பிக் பாஸில் ஜெயிக்கப்போவது ஒரு பெண் என்பது உறுதியாக தெரிந்திருக்கும் நிலையில் அது யார் என்பது தான் இப்போதைய கேள்வி.
முன்னரே ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வெற்றியாளர் என முடிவு செய்துவிட்டார். 

அதனால் யார் வெற்றி பெற்றாலும் அவரை தான் வெற்றியாளராக பிக் பாஸ் அறிவிப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் சிலர் கருத்து கூறினாலும், தற்சமயம் பிக் பாஸ் ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது ரித்விகா தான்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று வருகை தந்திருக்கும்  சென்றாயன் , வந்ததும் வராததுமாக பாத்ரூமை சென்று பார்வையிடுகிறார். அவர் இருந்தவரை பாத்ரூம் கழுவுவது அவர் தானே. இதனை ஒரு நடவடிக்கையில் குத்தலாக உணர்த்திவிட்டார் சென்றாயன். 

மேலும் அவர் சக போட்டியாளர்களிடம் பேசும் போது உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நீங்க நிறைய படம் கமிட் ஆக போறீங்க பாருங்க என உற்சாகமாக கூறி இருக்கிறார். ஐஸ்வர்யாவிடமும் நீ வருத்தப்படாத உனக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்காங்க என்று அவர் கூறி இருப்பது தான் இதில் ஹைலைட். 

ஏற்கனவே ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். ஆனால் சென்றாயனின் கருத்தோ முற்றிலும் முரணாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் டைட்டிலை ஐஸ்வர்யாவுக்கு கொடுக்க தான் இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறதோ பிக் பாஸ் குழு எனும் மக்களின் சந்தேகம் மேலும் அதிகரித்திருக்கிறது.