விஜயலஷ்மியை கீழே தள்ளிவிட்டு, தந்திரமாக ஜெயிக்க நினைக்கும் ஐஸ்வர்யா; கொலை வெறியில் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க போராட்டக்களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யாவுக்கும் விஜயலஷ்மிக்கும் இடையே நடக்கும் சண்டையும், போட்டியும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இப்போதைய ஹைலைட்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க போராட்டக்களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யாவுக்கும் விஜயலஷ்மிக்கும் இடையே நடக்கும் சண்டையும், போட்டியும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இப்போதைய ஹைலைட்.
ஏற்கனவே ஐஸ்வர்யா மீது கடுப்பில் இருக்கும் போட்டியாளர்களும் தற்போது விஜயலஷ்மியுடன் கை கோர்த்திருக்கின்றனர். ஆனாலும் ஐஸ்வர்யா தளராத மனதுடனும், யாஷிகாவின் துணையுடனும் , பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல போராடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் பிரமோவின் போது ஐஸ்வர்யா மீது சக போட்டியாளர்கள் அனைவருமே கோபப்படுவது போன்ற பிரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு டாஸ்க்கின் போது விஜஜலஷ்மியை பிடித்து கீழே தள்ளி இருக்கிறார் ஐஸ்வர்யா.
இதனால் சக போட்டியாளர்கள் விஜயலஷ்மிக்கு உதவி அவரை ஆசுவாசப்படுத்துகின்றனர். அந்த தருணத்தில் கூட ஐஸ்வர்யா தனது போட்டியை தொடர்கிறார்.
இதனால் கடுப்பான ஜனனி இது உன்னுடைய தந்திரம் எங்க எல்லார் கவனத்தையும் திசை திருப்ப நீ விஜயலஷ்மியை கீழே தள்ளி இருக்க. அடி பட்ட அவருக்கு நாங்க உதவும் இந்த சூழ்நிலையில் கூட, நீ டாஸ்க் தான் செய்யுற என கோபப்படுகிறார்.
அதே போல ரித்விகாவும் இது உண்மையான போட்டியே இல்லை நீ செய்யுறது தப்பு என கோபப்படுகிறார்.
இந்த இடத்திலும் எல்லோரிடமும் சண்டை போட்டுக்கொண்டு டாஸ்கில் தான் கவனமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் இந்த செயலை பார்த்து யாஷிகாவும் கூட வாயடைத்து போய் தான் நிற்கிறார். பிக் பாஸில் ஜெயிப்பதற்காக எதையும் செய்வார் இந்த ஐஸ்வர்யா, என்பது ஏற்கனவே மக்கள் அறிந்த ஒன்று தான். ஆனாலும் இது கொஞ்சம் டூ மச்.