ஷாரிக்கை பார்த்து வெட்கப்பட்டு கன்னம் சிவந்த ஐஸ்வர்யா!! இனியும் தொடருமா இந்த காதல்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் நெறுங்கி இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே எலிமினேட் ஆன போட்டியாளர்களை ,ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் நெறுங்கி இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே எலிமினேட் ஆன போட்டியாளர்களை ,ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வைத்திருக்கிறார் பிக் பாஸ். நேற்றைய நிகழ்ச்சியின் போது ரம்யா மற்றும் வைஷ்ணவி வந்தது போல , இன்றைய நிகழ்ச்சியின் போது ஷாரிக் மற்றும் நித்யா பிக் பாஸ் வீட்டினுள் வந்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டினுள் வந்ததும் நித்யா , பாலாஜியின் தலையில் ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது எவ்வளவு தூரம் தன்னை கஷ்டப்படுத்தியது என அப்போது தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த சமயத்தில் யாரும் ஐஸ்வர்யாவை தடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமாதனத்தை சொன்னாலும் ,எல்லாம் அவர்கள் வழக்கமாக ஒப்புக்கு கூறும் பதிலாகவே இருக்கிறது. இதனிடையே பிக் பாஸ் வீட்டினுள் வந்த ஷாரிக்கை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சொல்லிக்கொண்டனர். ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் ஷாரிக் அதே மனநிலையில் இருக்கிறாரா எனபது சரிவர தெரியவில்லை. ஆனால் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் ஐஸ்வர்யாவை கடுமையாக விமர்சித்திருந்தார். ஷாரிக் சரியான அம்மா பையன் என்பதால் இக்கதை இத்துடன் நிறைவடைகிறது.
இது தெரியாமல் ஐஸ்வர்யா வேறு ஒரு பக்கம் அநியாயமாக வெட்கப்படுகிறார். இதை பார்த்து அவரை கேலி செய்கின்றனர் சக போட்டியாளர்கள். மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி போல இன்றைய நிகழ்ச்சியும் போரிங்கா தான் இருக்கும் போல, என நொந்து போயிருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.