விழுப்புரத்தில் ஜெயிக்கப்போவது யாரு? அலசி ஆராய்ந்ததில் கிடைத்த அசத்தல் ரிப்போர்ட்
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பாமக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. வன்னியர்கள் வாக்கு சதவிகிதம் முன்பை விட சுமார் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த தொகுதியில் நேரடியாக பாமகவே களம் இறங்குவதால் வன்னியர்கள் வாக்குகளை அள்ளுவதிலும் பாமகவுக்கு எந்த சிரமமும் இருக்காது.
விழுப்புரம் மத்தியில் உள்ள இந்த தொகுதியில் பெருமளவு விவசாயப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதி நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதி. தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் இவை. அதுபோல கரும்பு விவசாயம் நடைபெறுவதால், அதிகமான கரும்பு ஆலைகளும் இந்த பகுதியில் உள்ளன. இவற்றை தவிர பெரிய அளவில் தொழிற்சாலைகள் இங்கு இல்லை. வன்னியர்கள் வாக்குவங்கியை பலமாக வைத்திருப்பதால் அதிமுகவிடம் கேட்டு வாங்கியிருக்கிறது பாமக. இது தனி தொகுதியென்பதால் விசிகவும் தள்ளிவிட்டுள்ளது திமுக.
திமுக கூட்டணி வேட்பாளர்; நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர் எனப் பன்முகத் திறமையாளரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலராக இருக்கிறார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட, விழுப்புரம் தொகுதியில் களமிறங்குகிறார் ரவிக்குமார். திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிட, ரவிக்குமார் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகிறார். ஏற்கனவே, கடலூர் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார், 2006 முதல் 2011 வரை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தார். தற்போது மீண்டும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்; வடிவேல் ராவணன், எம்.ஏ, பி.எல்., சமஸ்கிருதத்தில் பட்டயம் வாங்கியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த அவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் வசித்து வருகிறார். அவர் தமிழ்நாடு தேர்வாணையம், தலைமைச் செயலகக் கல்வித் துறை அலுவலகம், சாத்தூர் கனரா வங்கி ஆகியவற்றில் எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அவர் திருச்சி வானொலி நிலைய செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார். 1989ம் ஆண்டு பாமக உறுப்பினரான பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றும் அவர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து பாமக மாநில துணை பொதுச் செயாலளராக உள்ளார். அவர் 1991ம் ஆண்டு நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் 1996ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி எம்.பி.யாக இருந்தார், இதனையடுத்து திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டு வந்ததில். மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி.யாக இரண்டுமுறை தேர்வானார். பாமகவும் ஒரு முறை வென்ற தொகுதி. தற்போது தனித்த தொகுதியாக இருக்கும் விழுப்புரத்தில் பாமக விசிக நேரடியாகவே களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் சார்பில் அக்கட்சியில் மாநில துணை பொதுச் செயாலளராக உள்ள வடிவேல் ராவணன் களம் காண்கிறார். அதேபோல திமுக கூட்டணி சார்பில் விசிக பொருளாளர் ரவிக்குமார் சுயேச்சை சின்னத்தில் நின்று ரிஸ்க் எடுக்க விரும்பாததால் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நிற்கிறார்.
ஜாதீய வாக்குகள்; விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பாமக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. வன்னியர்கள் வாக்கு சதவிகிதம் முன்பை விட சுமார் ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த தொகுதியில் நேரடியாக பாமகவே களம் இறங்குவதால் வன்னியர்கள் வாக்குகளை அள்ளுவதிலும் பாமகவுக்கு எந்த சிரமமும் இருக்காது.
அதிமுக தேமுதிக வாக்குகள்; அதேபோல இந்த தொகுதியில் அமைச்சர் சீவி சண்முகம் இருப்பதாலும், அவரும் அதே வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனிக்கவனம் செலுத்துகிறார். அதிமுகவின் வாக்குவங்கி அப்படியே பாமகவுக்கு சிதறாமல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது ஒருபுறம் இருக்க தேமுதிகவும் இங்கு பலமாக இருக்கிறது. ஒன்றியம், கிளை வாரியாக குறிப்பிட்ட வாக்குகள் தேமுதிகவுக்கு உள்ளது. ஏற்கனவே மநகூ ஆரம்பித்து விஜயகாந்த்தை படுகுழியில் தள்ளியதில் திருமாவுக்கும் பங்குள்ளதால், விஜயகாந்த் கட்சியில் கோபத்தில் உள்ளனர். தற்போது திமுக மீதும் கடுப்பில் இருப்பதால் சிந்தாமல் சீதாராம் தேமுதிக வாக்குகள் அப்படியே வடிவேல் ராவணனுக்கே வாரி வழங்குவார்கள்.
ஒதுங்கியிருக்கும் பொன்முடி, முன்னாள் திமுக அமைச்சர் பி[ஒண்முடியின் மகன் கள்ளக்குறிச்சியில் நிற்பதால், விழுப்புரத்தில் கவனம் செலுத்தாமல், தன் மகனுக்காக கள்ளக்குறிச்சி தொகுதியிலேயே தனிக்கவனம் செலுத்துவதால் விழுப்புரத்தில் விசிக மட்டுமே களத்தில் உள்ளது. காங்கிரசுக்கென்று சொல்லிக்கொள்ளும்படி வாக்குவங்கி இல்லை, அதேபோல மதிமுகவும் வலுவாக இல்லாததால் ரவிக்குமார் கரையேறுவது சந்தேகம் தான் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.