தருமபுரி தொகுதியின் தற்போதைய நிலவரம் என்ன? அன்புமணி ஜெயிப்பாரா?
அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி இங்கு தருமபுரி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பிஜேபி கூட்டணியில் வென்ற இவருக்கு. பழகின தொகுதிதான் ஆனாலும் அன்புமணிக்கு பல்வேறு இன்னல்கள் சொந்த சமூகத்திலேயே எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி இங்கு தருமபுரி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பிஜேபி கூட்டணியில் வென்ற இவருக்கு. பழகின தொகுதிதான் ஆனாலும் அன்புமணிக்கு பல்வேறு இன்னல்கள் சொந்த சமூகத்திலேயே எழுந்துள்ளது.
இந்த தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடுபவர் டாக்டர் செந்தில்குமார். வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதாலும், அன்புமணியை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரை நிற்கவைத்துள்ளது. இரண்டு பெரும் ஒரே சமூகத்தில் நிற்கு போது நாம் மட்டும் எதற்கு வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நிற்கவைக்கணும் என எண்ணிய தினகரன் அதே சமூகத்தை சேர்ந்தவரை நிற்கவைத்துள்ளது. இப்படி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்கியுள்ளதால், அன்புமணியை வாக்கு அப்படியே சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வாக்குவங்கி , விசிகவின் தனிப்பட்ட செல்வாக்கும் மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் என திமுக வேட்பாளருக்கே விழும்.
இது போக காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளதும், அந்த கடுப்பு அப்படியே வேல்முருகனிடம் சேர்ந்துள்ளனர். தற்போது வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவாக உள்ளதால் பாமக ஓட்டுகள் பல்க்காக அப்படியே திமுகவுக்கே விழும்.
ஆளும் தரப்பின் சப்போர்ட் தருமபுரி தொகுதிக்கு சற்று குறைவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை எம்பி தேர்தலை விட அடுத்ததாக தொகுதியைவிட, இடைத்தேர்தல் நடக்க உள்ள அரூர், பாப்பிரெட்டிக்கு தான் அதிக கவனம் செலுத்துகின்றனர் அமைச்சர்கள். இது போக அதிமுக - பிஜேபி கூட்டணி மீதான அதிருப்தியும், கடந்த காலங்களில் பிஜேபி அதிமுகவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துத் தள்ளிவிட்டு அப்படியே அந்தர்பல்டி அடித்து அவர்களுடனேயே கூட்டணியில் சேர்ந்துகொண்டது என பல்வேறு விமர்சனங்கள் அன்புமணி மீது விழுகிறது.
இதைதவிர இது வரை தருமபுரியில் வேலைவாய்ப்பு தரும் எந்த ஒரு தொழிற்சாலையையும் இதுவரை நிறுவப்படவில்லை என தொகுதி முழுக்க பேச்சு நிலவுகிறது. ஒரு எம்பி பார்லிமென்ட்டுக்கு 80 சதவீதம் வருகை தர வேண்டும். ஆனால் அன்புமணி வெறும் 40 சதவீதம் மட்டுமே சென்றதும், எம்பி தன் தொகுதி சம்பந்தமாக 60 முதல் 65 கேள்விகளை கேட்கணும். ஆனால், அன்புமணி இதுவரை வெறும் 12 கேள்விகளைதான் எழுப்பி உள்ளார். அது மட்டுமின்றி தொகுதி பிரச்சினை பத்தி இதுவரைக்கும் எந்த கேள்வியும் எழுப்பாதது போன்ற பல மைனஸ்கள் இருக்கின்றன.
இப்படி பல மைனஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும் அன்புமணியை தற்போது சொந்த செல்வாக்கில் பலமான வேட்பாளராக இருக்கிறார். தொகுதிக்கு அன்புமணி செய்த அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு தொகுதியை கடந்த 5 வருடமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போன்றவை அப்புமணி தான் ஜெயிப்பார் என சொல்லப்படுகிறது.