கோவையில் ஜெயிக்கப்போவது யாரு? அசத்தலான ஒரு அலசல் ரிப்போர்ட்
கடந்த 5 ஆண்டுகளாக கோயம்புத்தூர் தொகுதி அதிமுக வசம் இருந்தது. ஏற்கெனவே தொகுதியில் பிஜேபி-க்கு உள்ள செல்வாக்கு, கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக தொகுதியைக் கையில் வைத்திருந்தது. இவை எல்லாம் தனக்கு பலம் சேர்க்கும் என்று எண்ணி கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார், சி.பி.ராதாகிருஷ்ணன்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. கொங்கு மண்டலத்தின் அரசியலைப் பிரதிபலிக்கும் முக்கியத் தொகுதியாக கோவை விளங்கி வருகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பாக கோவை மற்றும் திருப்பூர் வரை பரவிக்கிடந்த இந்தத் தொகுதி தற்போது கோவை மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தொகுதியாக விளங்குகிறது.
தொழில் நகரம் என்பதால் தொடக்க காலத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு வலிமையான தளம் கொண்ட பகுதியாக விளங்கியது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே இங்கு போட்டியிட்டு வென்றுள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரியை அடுத்து, பிஜேபிக்கு வாக்கு வாங்கி உள்ள தொகுதியென்றால் அது கோவை தான். அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் பலமுறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக கோயம்புத்தூர் தொகுதி அதிமுக வசம் இருந்தது. ஏற்கெனவே தொகுதியில் பிஜேபி-க்கு உள்ள செல்வாக்கு, கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக தொகுதியைக் கையில் வைத்திருந்தது. இவை எல்லாம் தனக்கு பலம் சேர்க்கும் என்று எண்ணி கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார், சி.பி.ராதாகிருஷ்ணன். அதிமுகவுக்கு சொந்த வாக்கு வங்கி உள்ள நிலையில் கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட அதிமுக திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு ஜெயித்தது. கடந்த தேர்தலில் அதிமுக நாகராஜன் 4,31,717 வாக்குக்ளை பெற்று வென்றார். அடுத்த இடத்தில், பிஜேபி சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளை பெற்று 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார். திமுக 2,17,083 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் வலிமையான ஆதரவு தளத்தை வைத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக குறைவான வாக்குகளே பெற்றது.
திமுக கூட்டணியில் போட்டியிடும் பி.ஆர். நடராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய 2009 முதல் 2014 ஆண்டு காலத்தில் இவருடைய முயற்சியின் காரணமாக கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டதோடு, 11 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாலக்காடு செல்லும் 5 ரயில்கள் கோவை வழியாக செல்லாமல் போத்தனூர் சென்று கொண்டிருந்தது. நடராஜன் முயற்சி எடுத்து காரணமாக அந்த 5 ரயில்களும் கோவை வழியாக தற்போது செல்கிறது. இதற்காக கோவை தொழில்துறை அமைப்பு, இந்திய வர்த்தகர் சங்கம், மலையாளிகள் சங்கம் ஆகியவை இணைந்து பாராட்டு விழா நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்க நடைபாதை, எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியை செய்திருந்தார். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாநில அரசு நீண்ட காலமாக இழப்பீடு வழங்காமல் இருந்தது. இவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் முதல் தவணையாக ரூ. 42 கோடி பெற்று தந்து பெயரெடுத்தவர். கோவையில் 2வது அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
மேலும் கரும்பு ஆராய்ச்சி நிலையம், ஜவுளித்துறை ஆராய்ச்சி நிலையம், தேசிய பஞ்சாலைக் கழகம், அரசு அச்சகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை பெற்றுத் தந்ததும் இவர் தான். நாடாளுமன்றத்தில் தொழிலாளர்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை ஆகிய துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். 2019 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு கோவை தொகுதியில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு தனித்து களம் கண்டா இவர் காங்கிரசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். கோவை மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமான இவரும் டஃபி பைட் கொடுத்து வருகிறார்.
கோவையில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 5 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு அதிமுக வென்றது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்ட திமுக சிங்காநல்லூரில் மட்டும் வென்றது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக 32 ஆயிரம் வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 22 ஆயிரம் வாக்குகளும் பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளிலும் பாஜக ஒரளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிமுக பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான கோவையில் கூட்டணிக் கட்சியான பிஜேபிக்கு ஓதுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல திமுக கூட்டணியிலும் கூட்டணிக் கட்சியான சிபிஎம் சார்பில் பி.ஆர்.நட்ராஜன் போட்டியிடுகிறார். அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் அதிமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன் பிஜேபியின் சொந்த செல்வாக்கும் கூடுதல் பலம். ஆனால் கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக கட்சிகளுக்கு பெருசா சொல்லிக்கொள்ளும்படியாக இங்கு வாக்கு வங்கி இல்லை.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதால் இரு தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக உள்ளது. திமுகவை தவிர அந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமின்றி காங்கிரஸுக்கும் இங்கு ஓரளவு வாக்கு வாங்கி உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.ஆர்.நட்ராஜன் இருவருமே இத்தொகுதியில் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர்கள். இதனால் இருவருக்குமே தொகுதியில் அறிமுகமும், தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. கடந்த முறை 3,89,701 வாக்குகளை பெற்று 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட பிஜேபி சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தமுறை அதிமுக வாக்குவங்கியொடு சுமார் 2 லட்சம் வாக்கு வாங்குவார் என சொல்லப்படுகிறது.