மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் இருந்து வருகிறார். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின்படி வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.  

இன்று வாக்குகள் எண்ணியதும் தொடக்கத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையை பெற்றுள்ளார். மத்தியில் பாஜக 330 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியே 37 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் இருந்து வருகிறார்.