Asianet News TamilAsianet News Tamil

பிஜேபி, அதிமுகவினரை ஊருக்குள் விடாமல் விரட்டியடித்த பெண்கள்... தெறித்து ஓடி வந்த வேட்பாளர் மற்றும் அமைச்சர்!

திருவாடானை அருகே பிஜேபி வேட்பாளரை வாக்கு சேகரிக்கவிடாமல் தடுத்து விரட்டிய கிராம மக்கள். இதனால் அமைச்சர் மணிகண்டன் பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் சோகத்தோடு திரும்பிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

Village people against BJP candidate and Minister
Author
Thiruvadanai, First Published Apr 13, 2019, 6:49 PM IST

திருவாடானை அருகே பிஜேபி வேட்பாளரை வாக்கு சேகரிக்கவிடாமல் தடுத்து விரட்டிய கிராம மக்கள். இதனால் அமைச்சர் மணிகண்டன் பி.ஜே.பி. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் சோகத்தோடு திரும்பிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம்,  திருவாடானை அருகே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளதால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராமம் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பிஜேபி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மற்றும் சில நிர்வாகிகள் திருவாடானை பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றபோது கூகுடி கிராமத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் அமைச்சரையும் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி எங்களுக்கு வழங்கவேண்டிய பயிர்  இழப்பீடு தொகை  கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

இதனையடுத்து, தொண்டி பகுதியில்  வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு கூடியிருந்த மீனவ மக்கள் எங்களது குடிநீர் பிரச்சனையை நீண்ட நாட்களாக கூறி ஒவ்வொரு முறையும் வேட்பாளர் வரும்போது செய்து தருவதாக சொல்வதோடு சரி இதுவரை யாரும் செய்யவில்லை. அதுமட்டுமில்ல ரேஷன் கடையும் சரிவர செயல்படவில்லை இதை சரி செய்து கொடுங்க என முற்றுகையிட்டனர். மேலும் நீங்க திரும்பிச் போங்க என கோஷம் எழுப்பியதால் அங்கு வாக்கு சேகரிக்க  முடியாமல் திரும்பினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios