உதயநிதிக்கு சவால் விட்ட விஜயபிரபாகரன்... தொடங்கியது வாரிசு அரசியல் யுத்தம்...
அன்புமணியை விவாதத்திற்கு அழைக்கும் நீங்க என்னோடு விவாதம் பண்ண ரெடியா? என விஜயகாந்த்தின் மகனும் புதிய வரவான வாரிசு தலைவர் விஜயகாந்த் மகன் சவால் விட்டுள்ளார்.
அன்புமணியை விவாதத்திற்கு அழைக்கும் நீங்க என்னோடு விவாதம் பண்ண ரெடியா? என விஜயகாந்த்தின் மகனும் புதிய வரவான வாரிசு தலைவர் விஜயகாந்த் மகன் சவால் விட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதில் விருது நகரும் ஒன்று, விருதுநகர் தொகுதியில் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தே.கல்லுப்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசும்போது, "இது எங்களுடைய பூர்வீகமான தொகுதி. அதனால்தான் அப்பா இந்த தொகுதியை கேட்டு வாங்கினார். போன முறை கேப்டன் பிரசாரம் செய்த அதே வாகனம்தான் இது. அதில்தான் நானும் இப்போது பிரசாரம் செய்கிறேன் எனக்கு இது பெருமையாக இருக்கிறது.
நம்ம கேப்டன் சீக்கிரமாக குணமாவது உங்கள் கையில்தான் உள்ளது. நீங்க தேமுதிகவை ஜெயிக்க வச்சா போதும், மக்களவைக்கு அனுப்பினால் அந்த சந்தோஷத்திலேயே கேப்டன் குணமாயிடுவாரு. இதுவரை எந்த அரசியல் தலைவரும் தங்களுடைய பிள்ளைக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா? அது எனக்கு தெரியவில்லை. ஆனால், நம்ம தலைவர் எனக்கு வைத்திருக்கிறார். அந்தப் பெயரை நான் நிலைநாட்டுவேன்.
மேலும் பேசிய விஜயபிரபாகரன், 8 வழிச்சாலை குறித்து விவாதம் தயாரா என்று அன்புமணியிடம் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். இப்போது நான் ஒரு சவால் விடுகிறன். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து என்கூட விவாதம் நடத்த அவர் தயாரா? எனக் கேட்டுள்ளார்.