இது விஜய் ரசிகரின் வீடு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்... தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளனர்.
தமிழி சினிமா உலகில் சூப்பர்ஸ்டாரான விஜய் இந்த தேர்தலில் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், கடந்த மார்ச் 17ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், திமுக அணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எழுத்தாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கப்பாண்டி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனால், விஜய் ஆதரவு திமுக கூட்டணிக்கா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதுகுறித்து விஜய்யோ, விஜய் தலைமை ரசிகர் மன்றமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமாருக்கு கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சபின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்து, வேட்பாளருக்குப் பொன்னாடை போர்த்திய விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய்யையும், வேட்பாளர் வசந்தகுமாரையும் வாழ்த்தி கோஷம் போட்டனர். இந்த தகவல் விஜய் காதுக்கு எட்டியும், மெர்சல் சமயத்தில் தமிழக பிஜேபி செய்த வேலையால் பிஜேபி மீது உள்ள காண்டில் விஜய் மௌனமாகவே உள்ளதாக தெரிகிறது.
சர்கார் படம் ரிலீஸின் போது அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் படையோடு படம் திரையிடும் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய் கட் அவுட்கள், பேனர்களை அகற்றினர். படத்திற்கு எதிராகப் போராட்டமும் நடத்தினர்.
இதனால் பலமாத கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள் அதிமுகவினருக்கு எதிரான இந்த எதிர்ப்பு தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படுகிறது. விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளின் முன்னால் இது விஜய் ரசிகரின் வீடு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை வைத்துள்ளனர். இதைப் புகைப்படமாக எடுத்துத் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த பதிவு அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.