தூங்காநகரத்தில் ஒரு தொகுதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 22 தொகுதிகளில் மினி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

 

இதில் கடைசியாக நான்கு தொகுதியான சூலூர்,ஓட்டப்பிடாரம்,திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சிக்கு தனியாக தேர்தல் நடைபெற்றது. இதில் முக்கியமாக திருப்பரங்குன்றம் பார்க்கப்பட்டது.காரணம் அ.தி.மு.க கோட்டையாக இத்தொகுதி இருப்பதுதான். இத்தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் என்பதால் அவர்களையே அனைத்து கட்சியும் களம் இறக்கினர். 

தி.மு.க சார்பில் டாக்டர்.சரவணன், அ.தி.மு.க சார்பில் முனியாண்டி, அ.ம.மு.க சார்பில் மகேந்திரன், மக்கள் நீதிமைய கட்சியின் சார்பில் சக்திவேல், நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரேவதியும் போட்டி இடுகின்றனர். இன்று வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் முடிவில் தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணன் 3571, அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டி 3086,அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் 239 ஓட்டுகளும் வாங்கியிருக்கின்றனர். முதல்சுற்றின் முடிவில் தி.மு.க முன்னிலையில் இருப்பதால் இக்கட்சியின் வேட்பாளர் டாக்டர்.சரவணன் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.