கரூர்  தொகுதியில், வாக்காளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை, ஆளுங்கட்சியினர் பலமாக கவனித்து வருகின்றனர். இதனால், இடைத்தேர்தல் நடப்பது போல, தேர்தல் களம் மாறியுள்ளதால், எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

கரூர் நாடாளுமன்றத் தொகுதி யில் அதிமுக சார்பில் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை போட்டியிடுகிறார். பணத்துக்கு பஞ்சம் இல்லாத செம்ம வெயிட்டு கை, தனது கட்சி நிர்வாகிகளை கவனிப்பதை விட, கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு, தனியாக வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்து பிரசாரத்துக்கு அழைத்துச் செல்கிறார். 

காலையில் தொடங்கி இரவு பிரசாரம் முடிந்த கையோடு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு செட்டில் செய்யப்படுகிறதாம்.  இது ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது, முக்கிய சில விவிஐபிக்களை சந்தித்து, ஆதரவு திரட்டுவது, மாலை நேரங்களில் தனியாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட வேலைகளில், அவரும் தனி ரூட்டைப் பிடித்துப் போய்க்கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக அதிமுக, நிர்வாகிகள், வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் பண்ணுவதாக கடைசி நேரத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்த கணக்கெடுத்து வருகின்றனர். அதாவது தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஒட்டு கேட்க போகாத போதும், நிர்வாகிகளே ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இரவு, 10:00 மணி வரை பிரசாரம் செய்து வருகின்றனர். 

கிராமப்புறங்களில் தம்பிதுரையை துரத்தியும், ஊருக்குள் விடாமல் சாலை மறியல் செய்தும், அமைதியாக கேட்கும் தம்பிதுரை, பிறகு புகார்களுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களை சமாதானப்படுத்தி அடுத்து இடத்துக்கு செல்கிறார். அப்போது, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு கைபடாத புது கரன்சி நோட்டை தட்டில் போடுவதும், கூட்டத்துக்கு வரும் ஆண்களுக்கு குவாட்டர் பாட்டில், 500 ரூபாய் காசு என அதிமுகவினர் பலமாக கவனித்து அனுப்புகின்றனர். கிளைமேக்சில் ஒரு வீடு விடாமல் அதாவது துட்டு கொடுப்பது உறுதியாகியுள்ளது. 

இதனால், வார்டு, வார்டாக, அதிமுக நிர்வாகிகளை எதிர்பார்த்து, வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். கரூர் தொகுதியில், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள், ஏதோ இடைத்தேர்தல் நடப்பது போல அனல் பறக்கிறது. இதனால், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.