எங்க பிரச்சனைகளை நீதான் தீக்கணும் தாயி... தமிழச்சியிடம் உரிமையோடு கவலைப்பட்ட பாட்டி!!
திமுக வேட்பாளர் தமிழச்சிதங்கப்பாண்டியன் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சந்து விடாமல், திருத்த தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு தெருவிலும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
திமுக வேட்பாளர் தமிழச்சிதங்கப்பாண்டியன் தென் சென்னை க்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சந்து விடாமல், திருத்த தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு தெருவிலும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரிடம், வடபழனியிலுள்ள பெண்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தமிழச்சியின் கூறியுள்ளனர். அதில், எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பசங்க படிப்பிற்கு கடன் வாங்குவதிலும் சிரமமாக உள்ளது. நாங்கள் பல வருடங்களாக வாடகை வீட்டிலேயே வசிக்கிறோம். எங்களுக்கும் சொந்தமாக வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை கேட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன், "திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்கள் தலைவரிடம் பேசி உங்கள் எல்லாப் பிரச்சைக்கும் தீர்வுக்காணப்படும். கலைஞர் ஆட்சியில்தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து தான் தினமும் நமக்கு குடிநீர் கிடைக்கிறது. மக்கள் தொகை பெருகிவிட்டதால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்போம்.
எல்லோர் வங்கியிலும் 15 லட்சம் போடுவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தாரே மோடி... அது போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். எங்கள் தலைவர் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். நான் வெற்றி பெற்று வந்தவுடன் உங்க குறைகளை எல்லாம் தலைவரிடம் சொல்லி இந்த தொகுதி மக்களின் தேவையை செய்வேன் என அந்த பகுதி பெண்களிடம் உறுதியளித்தார்.