Asianet News TamilAsianet News Tamil

அமோகமாய் ஜெயிக்கும் மகேந்திரன்! வேட்பாளர் தேர்விலேயே சொதப்பிய திமுக! சைலண்ட் சர்வேக்கள் சொல்லும் சவுண்டு ரகசியங்கள்...

தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமில்லாது, சகல கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ரகசியமாக பல சர்வேக்களை நடத்தியிருக்கின்றன. இதன் முடிவுகள் மிக துல்லியமாக வரவில்லை என்றாலும் கூட ரேண்டமாக வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

Survey result Pollachi constituency
Author
Theni, First Published Apr 9, 2019, 3:31 PM IST

அரசியல் அரங்கில்...பிரிக்கவே முடியாதவை "தேர்தல்களும், சர்வேக்களும்"  சர்வே நடத்தி, சாதகபாதகம் பார்த்துவிட்டே தேர்தலுக்கு தயாராவதும், தேர்தல் களத்தில் இருக்கையில் சர்வேக்களை நடத்தி, அதற்கேற்ப மூவ்களை முன்வைப்பதும்தானே சாணக்கிய அரசியல். அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என 40 தொகுதிகளிலும் செம்ம ஸ்பீடு சர்வே ஒன்றை ரகசியமாய் நடத்தியிருக்கிறது உளவுத்துறை போலீஸ். அதில் பொள்ளாச்சியில் ஆளுங்கட்சி வேட்பாளர் மகேந்திரன் அமோகமாய் ஜெயிப்பார்! என்று ரிசல்ட் வந்துள்ளதாம். 

விரிவாக பார்ப்போம்...

தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமில்லாது, சகல கட்சிகளும், தனியார் அமைப்புகளும் ரகசியமாக பல சர்வேக்களை நடத்தியிருக்கின்றன. இதன் முடிவுகள் மிக துல்லியமாக வரவில்லை என்றாலும் கூட ரேண்டமாக வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மாநில போலீஸ், மத்திய உளவுப்பிரிவு என்று பல்வேறு செக்டார்கள் எடுக்கும் சர்வே ரிப்போர்ட்களில் 90% ஒரே மாதிரியாக முடிவு இருக்கும் தொகுதிகளின் தேர்தல் முடிவும் அப்படியேதான் இருக்கும். அதாவது இப்போது சர்வேயில் என்ன சொல்லியிருக்கிறார்களோ, அதையேதான் தேர்தலில் செய்யப்போகிறார்கள் அந்த தொகுதி வாக்காளர்கள். 

அந்த வகையில் பார்க்கப்போனால் தமிழகத்தில் ஆளுங்கட்சி நிச்சயமாக ஜெயிக்கும் தொகுதிகளில் பொள்ளாச்சி முதன்மையாக இருக்கிறது! என்று தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒன்று ரெண்டு சர்வே முடிவுகள் மட்டுமல்ல, பல சர்வே முடிவுகளில் 95% முடிவுகளில் பொள்ளாச்சி ரிசல்ட் ஒரே மாதிரி இருக்கிறதாம், அது மகேந்திரனுக்கு சப்போர்ட்டீவாக இருக்கிறதாம். 

மகேந்திரனுக்கு வாக்களிக்க காரணம் என்ன? என்று கேள்விக்கான அலசலில்... கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெஞ்ச் தேய்க்காமல், தொகுதிக்கு நிறைய நிறைய அள்ளியள்ளி செய்திருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டியுள்ளன மக்கள். பல ஆயிரங்கோடிகளில் சாலைகள், பாலங்கள், குடிநீர் தொட்டிகள் என்றாரம்பித்து, ஒரு எம்.பி. எனும் நிலையை கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்! என்று மக்கள் காரணங்களை அடுக்கியிருக்கின்றனர். 

மேலும் தி.மு.க.வோ வேட்பாளர் தேர்விலேயே சொதப்பிவிட்டதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அக்கட்சியின் வேட்பாளரான சண்முகசுந்தரம், அவரது கட்சியினருக்கே அறிமுகமில்லாத நபர் என்பதும், 2009 தேர்தலில் தோற்ற பின், கட்சிப் பணிகளில் அவர் கடந்த பத்து வருடங்களாக  ஈடுபடுத்தவேயில்லை, இப்போது தேர்தலில் பைபாஸில் சீட் வாங்கிவிட்டார்! என்பதும் அக்கட்சியினரின் பெரும் நெருடல்கள், கோபங்கள். 

இதுவும் மகேந்திரனின் அமோக எழுச்சிக்கு முக்கிய காரணம்! என ஆனந்தமாய் சிலாகிக்கிறார்கள் அதிமுகவினர். ஆனால் திமுக தரப்போ திகிலடித்துக் கிடக்கிறது.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது.

Survey result Pollachi constituency

இந்தியாவின் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் 20 மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை 10ஆம் தேதிக்கு மேல் வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பை அதிக அளவில் வெளியிட்டுவருகின்றன.

டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களில் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றிபெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு ஓர் இடம்கூடக் கிடைக்காது என்றும் கணித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 39 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

Survey result Pollachi constituency

வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 53.12 சதவிகிதமும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 39.61 சதவிகிதமும் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 7.27 சதவிகிதமும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 62.8 ஆகவும், திமுக கூட்டணி 29.37 வாக்குகளையும் பெற்றுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios