அதிமுக வெங்கு மணிமாறனின் பழைய மேட்டர், கோஷ்டி பூசல், ஆளுங்கட்சிக்கு எதிராக விவசாயிகள் என மதிமுக வேட்பாளர் கணேசமுத்திக்கு ஆதரவான சூழலே நிலவும் நேரத்தில், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தியை தோற்கடிக்க  பக்கா ஸ்கெட்ச் போட்டு களத்தில் குதித்துள்ளதாம் ஸ்டெர்லைட் நிறுவனம் .

ஈரோடு மக்களவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் காங்கேயத்தில் சேர்மனாக இருந்த வெங்கு மணிமாறன் வேள்ப்பாளராக இருக்கிறார். அவருக்கு எதிராக திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் மாநிலப் பொருளாளரான கணேசமூர்த்தி உதயசூரியனில் போட்டியிடுகிறார். 

அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனைப் பற்றி சொல்லவே வேண்டாம், மனுஷன்  காங்கயம் நகராட்சியின் சேர்மனாக இருந்தபோது பைப் கனெக்‌ஷன் கொடுப்பதற்கு பணம் வசூல் செய்து பெரியளவில் முறைகேடு செய்ததாக ஒரு புகார் எழுந்தது. அடுத்ததாக, வரி வசூல் உள்ளிட்ட பல விஷயங்களில் கமிஷன் போட்டு கல்லா காட்டுவார்.  அப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் அப்ரூவல் கொடுக்கணும்னா மூன்று பிளாட்டுகள் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுப்பதை வழக்கமாகவே வைத்து வந்துள்ளார். மேலும், வெங்குவும், இவரது நெருங்கிய உறவினரும் சேர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து ரியல் எஸ்டேட் எனும் பெயரில் நிலங்களை மிரட்டி வாங்கியதாகப் புகார் உள்ளது. 

இது ஒருபுறமிருக்க, ரியல் எஸ்டேட் பிஸ்னஸுக்காக தனக்கு விற்பதாக கூறி பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆனால் நிலத்தை முறைப்படி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், திரும்பிக்கேட்டதால், ‘நான் யாருன்னு தெரியாதா?  உங்களைக் கொன்னுடுவேனன்னு கொலை மிரட்டல் என பல மேட்டரில் சிக்கியிருக்கிறார். அது போக மாஜி அமைச்சரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கே.வி.ராமலிங்கம், மாஜி துணை மேயர் கே.சி பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன் என பதினெட்டு கோஷ்டிகள் அதிமுகவில் இருப்பது மணிமாறனுக்கு எதிராக கிளம்பியிருக்கிறதாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தினகரனின் அமமுக வேட்பாளர் சரவணன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுகவின் வாக்குகளில் சுமார் பதினைந்தாயிரம் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

ஆனால் மதிமுக கணேசமூர்த்தியைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எளிமையானவரும் கூட, ஈரோட்டில் ஜவுளித் தொழிலால் ஜிஎஸ்டியால் பறிபோனது. மேலும் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள், கெயில் குழாய் போன்றவை அமைத்து வாழ்வாதாரங்களைப் பறிக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகள் மீது இருக்கும் மக்களின் கோபம்  கடைசி நேரத்தில் கணேசமூர்த்திக்கு ஆதரவாகவே இருக்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உயர் மின் கோபுர கூட்டமைப்பு விவசாயிகளும் கணேசமூர்த்திக்கு ஆதவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மஞ்சளுக்கு உச்ச விலை, ஆலைக்கரும்புக்கு அருமையான விலை, கொப்பரைக்கும் குஷியான ரேட் என விவசாயிகளுக்கு தோள் கொடுத்துள்ளதால், ஈரோடு விவசாயிகள் மொத்தமாக கணேசமூர்த்திக்கே ஆதரவாக உள்ளனர்.

ஈரோட்டில் தேர்தல் களம் இப்படியிருக்க,  மதிமுக முக்கிய பிரதிநிதியான கணேசமூர்த்தி வெற்றிபெற்று எம்பியாகக் கூடாது என்ற அசைன்மென்டில், ஸ்டெர்லைட் நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை அதிமுக தரப்பில் தகவல் கசிந்திருக்கிறது.  கடைசி நேரத்தில் எப்படியும் கரன்சியை வைத்தே கணேசமூர்த்திக்கு ஆதரவான வாக்கு வங்கியை அப்படியே திருப்பிவிடும் மாஸ்டர் பிளானில் காய் நகர்த்துவதாகவே தெரிகிறது.