கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவார்... தஞ்சையில் தெறிக்கவிட்ட உதயநிதி
மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
மறைந்த தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் ஆறே நாட்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் அனல் தெறிக்கிறது. அதிலும் பிரசாரத்தில் தனி முத்திரை பதிக்கும் வகையில் உதயநிதியின் பிரசாரம் அமைந்திருக்கிறது.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தஞ்சையில் உதயநிதி பிரசாரம் செய்தார். அப்போது பேசும்போது; நான் பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். மக்களின் இந்த ஆரவாரத்தை மோடி எதிர்ப்பு அலை என சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை இது ஸ்டாலினுக்கு உருவாகும் ஆதரவு அலை என சொல்லலாம்.
டெல்டாப் பகுதிகளில் புரட்டிப் போட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஏன் வரவில்லை. ஆனால் தற்போது தேர்தல் என்றவுடன் வந்து செல்கிறார். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் தருவதாக பொய்யான வாக்குறுதியளித்தார் மோடி. ஆனால் ஒருவருக்கு கூட தரவில்லை.
வரும் 18-ஆம் தேதி திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்? எல்லாம் மோடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால்தான். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மக்கள் வாக்களித்து எடப்பாடியை தேர்வு செய்யவில்லை. சசிகலாவின் காலை பிடித்துதான் அவர் முதல்வரானார். எனவே அவர் மக்கள் முதல்வர் இல்லை.
நடக்கவுள்ள 22 சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். மறைந்த நமது தலைவர் கருணாநிதி பிறந்தநாளான வரும் ஜூன் 3-ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.