Asianet News TamilAsianet News Tamil

அமமுகவை குறிவைத்து அடிக்கும் பறக்கும் படை... 18 இடைத்தேர்தல் தொகுதிகளில் அதிரடி வேட்டை!

நாளை நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.  ஆனால் பணப்பட்டுவாடா தமிழகம் முழுவதும் தாறுமாறாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால், இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அமமுகவை குறிவைத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Special police force target 18 AMMK candidate
Author
Chennai, First Published Apr 17, 2019, 8:20 PM IST

நாளை நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.  ஆனால் பணப்பட்டுவாடா தமிழகம் முழுவதும் தாறுமாறாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால், இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அமமுகவை குறிவைத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து,  தூத்துக்குடியில் தங்கியிருந்த திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் வெறும் கையோடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடக்கும் தேனி ஆண்டிபட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதால் போலீசார் அங்கும் ரெய்டு விட்டனர்.

Special police force target 18 AMMK candidate

அப்போது அமமுகவினர் தடுத்ததால், வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை கூட்டினர். பின்னர் அலுவலகத்திற்குள் நுழைந்து கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் 18 தொகுதிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யவிருப்பதும், சில தொகுதிகளில் டோக்கன் கொடுத்து வருகிறார்களாம்.

இந்த விசாரணையின் அடிப்படையில், 18 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று சாத்தூரில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.  

Special police force target 18 AMMK candidate

இந்த ரெய்டில், அதில் சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சாத்தூர் இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் தோட்டத்தில் இருந்து ரூ.33 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த ரெய்டின் மூலம், 18 தொகுதியிலுள்ள அமமுகவினரை குறிவைத்து போலீசார் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios