சொல்லி தூக்கிய செந்தில் பாலாஜி... கதிகலங்கி நிற்கும் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள்!!
திமுகவில் இணைந்ததிலிருந்து தீயா வேலை பார்த்து திமுக நிர்வாகிகளை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி, சில மாதங்களிலேயே தலைமையின் நம்பிக்கையை பெற்று சீட் வாங்கியது கொங்கு மண்டல நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தாலும், திமுகவினர் சிலர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை பார்த்து வியந்து போயுள்ளதாகவே சொல்கிறார்கள்.
திமுகவில் இணைந்ததிலிருந்து தீயா வேலை பார்த்து திமுக நிர்வாகிகளை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி, சில மாதங்களிலேயே தலைமையின் நம்பிக்கையை பெற்று சீட் வாங்கியது கொங்கு மண்டல நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தாலும், திமுகவினர் சிலர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை பார்த்து வியந்து போயுள்ளதாகவே சொல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது.
திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன், சூலூர் - பொங்கலூர் பழனிச்சாமி , அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, ஓட்டப்பிடாரம் - எம்.சி. சண்முகையா, இதில், செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தார். அதிமுகவிலிருந்து தினகரனை ஒதுக்கியதற்குப் பின் அவருக்கு வலதுகரமாக இருந்த இவர். சமீபத்தில்தான் விலகி வந்து தந்து ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்தார். இந்நிலையில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற அரவக்குறிச்சி தொகுதியையே கொடுத்துள்ளது திமுக.
தீயா வெளிப்பார்த்து திமுக நிர்வாகிகளை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி பற்றி கொங்கு மண்டல நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தாலும், திமுகவினர் சிலர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை பார்த்து வியந்து போயுள்ளதாகவே சொல்கிறார்கள்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்ததிலிருந்து நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறார். அவர் ஏற்பாடு செய்த அனைத்து பொதுக்கூட்டங்களுமே சிறப்பாக பிரமாண்டமாக நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, கரூர் தொகுதியில் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட திமுகவே தலைமை சொன்னதாம், அதனால் அவரும் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார் ஆனால் அந்த தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த வாய்ப்பும் மிஸ் ஆனது ஆனாலும், கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணிக்கும் பல வகையில் உதவி செய்து வந்தார்.
கூட்டணியில் இருந்தாலும் இன்னொரு கட்சி வேட்பாளருக்கு துணை நிற்க மாட்டார்கள். ஆனால் செந்தில்பாலாஜி அப்படியெல்லாம் பார்க்காமல் முழு ஈடுபாட்டோடு, பிரச்சாரம் முதற்கொண்டு அனைத்திலும் கூட்டணி கட்சியினருக்கு உறுதுணையாக உள்ளார். அவருக்கு கரூரில் செல்வாக்கும் உள்ளது, மேலும் அவரது நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மேலிடத்திற்கு பிடித்ததால், அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்கியதாகவே சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியின் இந்த அதிரடியான வளர்ச்சியும், சேர்ந்த சில மாதங்களிலேயே சொல்லி அடித்த அந்த சாமர்த்தியமும் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை கதிகலங்கி போக வைத்துள்ளதாம்.