கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவிற்கு ஆப்படிக்கும் ராமதாஸ்... ஓபிஎஸ் இபிஎஸ் அதிர்ச்சி!!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் தேமுதிகவின் தலைவர்கள் பிரசாரம் அதிமுகவை அநியாயத்திற்க்கென்றே, எதிரணியினர் தாக்குவதைவிட பயங்கரமாக தாக்குகின்றனர். அதாவது கூடவே இருந்து குழிபறிப்பதாகவே அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

Ramadoss Attacked ADMK and ADMK candidates

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் தேமுதிகவின் தலைவர்கள் பிரசாரம் அதிமுகவை அநியாயத்திற்க்கென்றே, எதிரணியினர் தாக்குவதைவிட பயங்கரமாக தாக்குகின்றனர். அதாவது கூடவே இருந்து குழிபறிப்பதாகவே அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

அதிமுக கூட்டணியில் பாமக , பிஜேபி , தேமுதிக  தாமாக மற்றும் சில கட்சியினர் இடம்பெற்றுள்ளனர் . அந்தந்த கட்சி தலைவர்கள்  தங்களது கட்சி வேட்பாளர்களையும் , கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர் . 

இந்நிலையில் திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு  வாக்கு சேகரிப்பில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இந்த தொகுதியில்  மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வாழும் பகுதியாக உள்ளது . மீனவ சமுதாய மக்கள் எப்போதுமே  அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் வேற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு,  ஆகையால்  தேர்தலில்  சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக்கூறினார். 

Ramadoss Attacked ADMK and ADMK candidates

பின்பு திமுகவுக்கு பதில் அதிமுக என்று கூறிவிட்டோம் என்று சுதாரித்துக்கொண்ட  ராமதாஸ் திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக வேட்பாளர்கள் என்பதற்குப் பதிலாக, அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறியதால் பொதுக்கூட்டத்தில் இருந்த கூட்டணிக் கட்சி தொண்டர்களும் , நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். 

சமீப காலமாக அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பிரேமலதா, பாமக தலைவர்கள் ராமதாசும், அன்புமணியும் இப்படி மாற்றி பேசுவதும் வாய்க்கு வந்த மாதிரி உளறுவதும் தொண்டர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை எரிச்சலடைய வைக்கிறது என புலம்பித தள்ளுகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios