ராகுல் காந்திக்கு ஆதரவாக சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் நேரத்தில், தனது மாமாவிற்காக அவரது வாரிசுகள் வயநாடு தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் நேரத்தில், தனது மாமாவிற்காக அவரது வாரிசுகள் வயநாடு தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக, பாரத் தர்ம ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட ராகுல் இந்த முறை கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.

தென்மாநிலம் ஒன்றிலிருந்து ராகுல் போட்டியிடுவது இதுவே முதன்முறை.கேரளாவில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் கேரளாவில் பரபரப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்க்கு வயநாடு தொகுதியில் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி வருகின்ற மக்களவைத் தே்ாதலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா்.  

இந்நிலையில் அண்ணன், ராகுல் காந்திக்காக தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவா் ராபா்ட் வதேரா, பிரசாரம் மேற்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து தனது மாமா ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தியின் மகன் ரேகன், மகள் மிரயா உள்ளிட்டோா் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் இருந்த அவர்கள், வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசியல் களத்திற்கு வந்து கவனத்தை ஈர்த்த பிரியங்கா காந்தியைப் போல, அவரது வாரிசுகளும் அரசியல் லைம் லைட்டுக்குள் வந்துள்ளனர்.