அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார். 

இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனீரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் 20 தொதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, ராகுலை விட சுமார் 9000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.