அன்புமணி, விஜயபாஸ்கரை கலாய் கலாய்ன்னு கலாய்த்துவிட்டு சமாளித்த பிரேமலதா... கொந்தளிக்கும் அதிமுக பாமக தொண்டர்கள்!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் விஜயபாஸ்களை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என கலாய்த்ததும், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை 50 வயதான இளைஞர் என கலாய்த்து பிரச்சாரம் செய்ததால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் விஜயபாஸ்களை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என கலாய்த்ததும், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை 50 வயதான இளைஞர் என கலாய்த்து பிரச்சாரம் செய்ததால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவுடன் சேர ஆரம்பத்தில் ஆட்டம் காட்டிய தேமுதிக, கடைசியில் கூட்டணியில் இணைந்தது. பல விமர்சங்களை கடந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று தர்புமரி நான்கு ரோடு அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரேமலதா பேசுகையில், அரசியலில் உள்ள இளைஞர்களில் மிகவும் சிறந்தவர் அன்புமணி தான். அவர் மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அன்புமணி ராமதாஸ் தான் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்தார். புகையிலை மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அன்புமணி.அதனால் இன்று புகைப்பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது . மேலும் நமது தமிழகம் முன்னேற பல தொலைக்கு திட்டங்களை பற்றி பேசிவருகிறார் என்று தாறுமாறாக புகழ்ந்து பேசினார்.
அதேபோல நம்ம கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் நம்ம சுதீஷ், சின்னய்யா அன்புமணி, சரவணன் போன்ற ஒரு சிலர் தான் இளைஞர்கள் என்று பிரேமதலா விஜயகாந்த் சொன்னார். மற்றவங்க எல்லாருமே வயசானவங்க கலாய்க்கும் விதமாக பிரேமலதா சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியிருக்கிறார்.
இளைஞர்களை நல்வழிப்படுத்த அன்புமணி போன்ற இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை. இளைஞரான அன்புமணிக்கு 50வயது தான் ஆகிறது. அன்புமணி ஒரு யங் சாப்" இவ்வாறு கூறினார்.
இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா , குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று சொல்லிவிட்டு, ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைக்கலாம் என செம்மையாக சமாளித்தார். ஆனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது அன்புமணியை 50 வயது இளைஞர் என்கிறார். இதனால் அன்புமணி நிஜமாகவே பிரேமலதா பாராட்டுகிறாரா? அல்லது கலாய்க்கிறாரா என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.