செலவுக்கு சல்லிக் காசுக்கு கூடுக்காமல் வேட்பாளரை டீலில் விட்ட கொடுமை!! கட்சிக்காரர்கள் கெஞ்சிக் கேட்டும் காதில் வாங்காத பிரேமலதா...
தேர்தல் செலவிற்கு பணம் கேட்டதால், திருச்சி, தேமுதிக வேட்பாளருடன், சண்டை போட்ட பிரேமலதா. கட்சிக்காரர்கள் கெஞ்சிக்கேட்டும் சண்டைபோட்டு கோபத்தில் எகிறி சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தேர்தல் செலவிற்கு பணம் கேட்டதால், திருச்சி, தேமுதிக வேட்பாளருடன், சண்டை போட்ட பிரேமலதா. கட்சிக்காரர்கள் கெஞ்சிக்கேட்டும் சண்டைபோட்டு கோபத்தில் எகிறி சம்பவம் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருச்சி தொகுதியில், தேமுதிக வேட்பாளராக, அக்கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் களமிறங்கியுள்ளார். இவர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். அதனால் அதிமுக கூட்டணியில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட விரும்பினார். பாமகவிற்கு, அந்த தொகுதியை கொடுத்துவிட்டதால், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட விரும்பினாராம். அந்த தொகுதியை ஏற்கனவே தனக்காக ரிசர்வேஷன் செய்து வைத்திருந்த கேபி முனுசாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டாராம்.
இதனால், போட்டியிடாமல் ஒதுங்க முடிவெடுத்த இளங்கோவனை கட்டாயமாக, திருச்சியில் போட்டியிடுமாறு, விஜயகாந்தும், பிரேமலதாவும் சொன்னதால். தேர்தல் செலவுகளை, திருச்சி மாவட்ட அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்துக் கொள்வர் என சொன்னதால் ஓகே சொன்னாராம். மூன்று அமைச்சர்கள் பலம் இருப்பதால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என இளங்கோவன் நம்பினார். ஆனால் தற்போதுவரை கை செலவுக்கே காசு இல்லாமல் திண்டாடி வந்தாராம். விஜயகாந்தை தொடர்பு கொண்டு, தன் நிலை குறித்து, அவர் புலம்பி தள்ளினார்.
இதையடுத்து, தேர்தல் செலவிற்கு ஏற்பாடு செய்வதாக, விஜயகாந்த் சொன்னாராம். முதற்கட்டமாக, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என, அவரிடம் கூறப்பட்டது. இதனால், மிகுந்த நம்பிக்கையில், இளங்கோவன் இருந்தார். ஆனால், இதுவரைக்கும் கைக்கு சல்லி காசு கூட கொடுக்கலையாம்.
இந்நிலையில், திருச்சியில், பிரேமலதா பிரசாரம் செய்ய வந்தார். அவரிடம் பணம் கேட்டுள்ளார் வேட்பாளர் இளங்கோவன். ஒரு பைசா கூட தர முடியாது, கட்சி தலைமையிடம் பணம் இல்லை என பிரேமலதா கைவிரித்து உள்ளார். நான் உங்களை நம்பித்தானே எலக்சன்ல நின்னேன், வயதில் மூத்த, என்னை நீங்க ஏமாற்றலாமா? என்று, பிரேமலதாவிடம், நேருக்கு நேர், இளங்கோவன் வாக்குவாதம் செய்துள்ளார். அதுமட்டுமல்ல மாவட்ட செயலாளரும் சில நிர்வாகிகளும், வேட்பாளரின் நிலைமையை விளக்கியுள்ளனர். இதை கொஞ்சமும் எதிர்பாராத பிரேமலதா கடுப்பில் பயங்கரமாக கத்தினாராம்.
எப்போதுமே பிரேமலதா வாகனத்தில் நின்றபடியே பிரசாரம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது வேட்பாளர் மற்றும் மாவட்ட செயலர்கள் மீது கோபத்தை காட்டுவதற்காக, இருக்கையில் அமர்ந்து பேசியுள்ளார். எழுந்து நின்று பேசும்படி கட்சியினர் கெஞ்சிக் கேட்டும், காதில் வாங்க, பிரேமலதா மறுத்து விட்டாராம். பிரசாரம் முடிந்ததும் தனது கோபத்தில் கிளம்பிவிட்டாராம்.