பாமகவை தோற்கடிக்க பக்கா பிளானோடு இருக்கும் திமுக... முறியடிக்க நள்ளிரவில் உலாவரும் கட்சியினர்!! இறுதிக்கட்டத்தில் குட்டிக்கரணம் அடிக்கும் கொடுமை...
நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கள நிலவரம், சாதகமாக இல்லை என்ற தகவலால், வன்னியர் சமூக முக்கியஸ்தர்களை, பாமக நிர்வாகிகள், வன்னியர் சமுதாய மக்களை நள்ளிரவில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இது குறித்து பாமக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்: அதிமுக கூட்டணியில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், கடலுார், விழுப்புரம், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய, ஏழு தொகுதிகளில், பாமக போட்டியிடுகிறது. அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்த நிலையில், அக்கட்சியுடன், பாமக கூட்டணி அமைத்ததை, சொந்த கட்சி தொண்டர்களே விரும்பவில்லை. அதனாலேயே, ராஜேஸ்வரி ப்ரியா, நடிகர் ரஞ்சித் மற்றும் பொங்கலூர் மணிகண்டன் உள்ளிட்டோர் பாமாவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.
கூட்டணியில் இணைந்ததற்கு பின், பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பல தேர்தல்களில், தனித்து போட்டியிட்டதால், கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு; தொண்டர்கள் சோர்வு உள்ளிட்ட காரணங்களை விரிவாக தெரிவித்தார். அதை ஏற்ற கட்சியினர், அதிமுகவுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாமகவினருக்கு, அதிமுக நிர்வாகிகளிடம் கிடைக்கும் வரவேற்பு, தொண்டர்களிடம் கிடைப்பதில்லை.ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், பாமக வேட்பாளர்களை தோற்கடிக்க தனி கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, அவரின் ஆதரவு பெற்ற, வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள், தொகுதி வாரியாக சென்று, பாமக ஒன்றிய செயலர், தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணியில் இருந்து, ஒதுங்கி இருக்கும்படி கூறி வருகின்றனர்.
மேலும், ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி, அதிமுக தலைவர்களை டயர் நக்கி, அடிமைகள் எனா கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோ பதிவுகள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆதரவு கேட்டு இந்த சூழலில், 7 தொகுதிகளின் கள நிலவரம் படு மோசமாக இருக்கிறது என்று, பாமக தலைமைக்கு தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், பாமக போட்டியிடும் தொகுதிகளில், வன்னியர்சமூகத்தை சேர்ந்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து, தங்கள் சமூகத்திற்கு ராமதாஸ் மூலமாக கிடைத்த நன்மைகளை சொல்லி, ஆதரவு கோரி வருகின்றனர். அதுமட்டுமல்ல, அரசு துறைகளில் வேலை செய்வதால், பகல் நேரத்தில் சந்தித்து ஆதரவு கேட்பதை முக்கியஸ்தர்களும் விரும்பவில்லை இதனால், நள்ளிரவில், வீடுகளுக்கு சென்று, பாமகவினர் ஆதரவு கோரி வருகின்றனர் என இவ்வாறு அவர் கூறினார்.