அன்புமணி குலுங்கி குலுங்கி அழுத வீடியோவை காட்டி நூதன பிரசாரம்... மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அழுது, ஓட்டு கேட்கும் வீடியோவை, அக்கட்சியினர், வன்னியர் சமூக பெண்களிடம் காட்டி அனுதாப ஓட்டுகளை சேகரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அழுது, ஓட்டு கேட்கும் வீடியோவை, அக்கட்சியினர், வன்னியர் சமூக பெண்களிடம் காட்டி அனுதாப ஓட்டுகளை சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2016 சட்ட சபை தேர்தலின் போது, பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டார். அவர், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய பிரசார முறைகளை மேற்கொண்டார். இது பாமகவினரை மட்டுமின்றி வன்னிய இளைஞர்களை ஈர்த்தது. ஆனால் திமுகவினர், மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நெட்டிசன்ஸ் மரண கலாய் கலாய்த்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை, அன்புமணி, கடுமையாக விமர்சித்தார். ராமதாஸ், அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்தார். நடக்கவுள்ள தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து அன்புமணி, ராமதாஸ் பேசிய, வீடியோ பதிவுகளை, திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அன்புமணி, கடந்த 10-ம் தேதி இரவு கடகத்தூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது அன்புமணி தன்னையும் மறந்து, கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுதார், என் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என அழுதுகொண்டே பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்துவிட்டது. அவர் அழுவதைப் பார்த்த மக்கள், சின்னய்யா, சின்னய்யா என்று கோசமிட்டனர். அன்புமணி அழுதுகொண்டே பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது வருகிறது.
அதை, பாமகவினர், வன்னிர் சமூக பெண்களிடம் காட்டி, அனுதாப ஓட்டுகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து, பாமக நிர்வாகி கூறுகையில்: பாமக மூத்த தலைவர்களை, ஜெயலலிதா கைது செய்ததால் தான் அதிமுகவினரை, அன்புமணி விமர்சித்தார்.இந்த தேர்தலில், வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர், ஓட்டுக்காக அழவில்லை. கட்சியினரை சந்தித்த உணர்ச்சியில் அழுது விட்டார் எனக் கூறினார். அதேசமயம், எதிர்கட்சிகள், அதிமுகவை கடுமையாக விமர்சித்து விட்டு, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்ததை வன்னியர் சமூகத்தினரே விரும்பவில்லை, அதனால் தோல்வி பயத்தில், அன்புமணி அழுகிறார் என மீம்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.