தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக போகிறது. இந்தியாவில் பி.ஜே.பி அலை மீண்டும் விசுகிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு ஒரு அலையும் வீசுவதாக தெரியவில்லை. 

காரணம் தமிழகத்தில் 38 தொகுதிகளில் தி.மு.க 36 இடங்களிலும் அ.தி.மு.க 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார்கள். அதுவும் அ.தி.மு.க கூட்டணி கட்சியாக இருக்கும் தர்மபுரியில் பா.ம.க வேட்பாளர் அன்புமணி மற்றும் கோவையில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் முன்னிலை வேட்பாளர்களாக இருக்கிறார்கள். 

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும்கட்சியான அ.தி.மு.கவிற்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். இதை அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஜெயலலிதா மக்களிடம் பேசும் போது உரக்க சொல்லுவார். ஆனால் தற்போதுள்ள தேர்தல் முடிவில் தமிழகத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் பரிதாபகரமான இருக்கிறது தற்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க. இப்படி ஒரு நிலை இருந்தால் தொடர்ந்தால் பேரியக்கமான அ.தி.மு.க நிலை இனி என்ன ஆகும் என்ற அதிர்ச்சி அ.தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் எழுந்துள்ளது.