அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? ஓபிஎஸ் மகன் ஓபிஆரின் அசத்தல் பிரசாரம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேனி பாராளுமன்ற தொகுதியில் இணைகிறது. இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளராக துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துவருகிறார்.
அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் ஆரத்தியில் உள்ள வெற்றிலை வாய் சிவக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை சிறக்கணும்னா இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்க என ரவீந்தரநாத் மக்கள் மத்தியில் சுவாரஷ்யமான பேசிவருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேனி பாராளுமன்ற தொகுதியில் இணைகிறது. இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளராக துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துவருகிறார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் பேசுவது இப்படித்தான் இருக்கிறது... அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் உங்களை வீடு தேடி வந்து ஆதரவு கேட்டிருப்பேன்.
ஆனால் 6 சட்டமன்ற தொகுதிக்கும் போக வேண்டும் என்பதால் வர முடியவில்லை. நான் இப்பகுதிக்கு புதியவன் அல்ல, இந்த மண்ணின் மைந்தன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகனும்கூட. இதற்கு முன்பு இதே பகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு இங்கு வந்து ஓட்டு கேட்டிருக்கிறேன். தற்போது உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
நமது தேனி மாவட்ட பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை வசதியில் பின் தங்கியிருந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாக்கு சேகரிக்க வரும் மற்ற வேட்பாளர்கள் உங்களையெல்லாம் குழப்புவார்கள். அதையெல்லாம் நீங்க பெருசா நம்ப மாட்டீங்கன்னு நினைக்கிறேன். ஈரோட்டில் இருந்து வந்திருக்கிறார், அவர் வெளியூர்க்காரர் அவரை நீங்கள் தேடிப்போய்தான் பார்க்கமுடியும்.
இங்கேயே இன்னொரு வேட்பாளர் வாயிலேயே கோலம் போடுவார், அது ஒன்றுக்கும் உதவாது. எனவே நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் ஆரத்தியில் உள்ள வெற்றிலை வாய் சிவக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை சிறக்கணும்னா இரட்டை இலைக்கு ஒட்டு போட்டு என்னைத் தேர்ந்தெடுங்கள் என சுவாரஷ்யமான பேசி வருகிறார்.