மெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..!

வளர்ந்த நகரமான மெட்ரோ சிட்டிகளில் இம்முறை பா.ஜ.க அலை வீசுகிறது வளர்ந்த நகரமான மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கிறது.

Modi stamped the band on metro city

வளர்ந்த நகரமான மெட்ரோ சிட்டிகளில் இம்முறை பா.ஜ.க அலை வீசுகிறது வளர்ந்த நகரமான மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கிறது. 

இதனால் இவர்களின் வாக்கு யாருக்கு என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இம்முறை இந்திய மெட்ரோ நகர வாக்காளர்களின் வாக்கை காங்கிரஸ் கட்சி வெகுவாக இழந்து இருக்கிறது. அதேசமயத்தில் பாஜக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகள் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் வருகின்றன. Modi stamped the band on metro city

இவற்றில் மும்பையில் உள்ள 6 தொகுதியிலும் (பாஜக 3, சிவசேனா 3), டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், ஹைதராபாத்தில் 1 தொகுதியிலும், பெங்களூருவில் 3 தொகுதிகளிலும் என 17 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இவற்றில் 14 தொகுதிகளில் பாஜகவே நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. Modi stamped the band on metro city

கொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுகவும், ஹைதராபாத்தில் 1 தொகுதியில் அனைத்திந்திய மஜீஸ் இதேஹதுல் முஸ்லிமீன், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இப்போதுள்ள நிலவரப்படி இந்திய மெட்ரோ நகரங்களின் ஒரு தொகுதியில் கூட நேரடியாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இல்லை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios